
புதுச்சேரி மார்ச் 19
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாஹே சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக டி.கே.கங்காதரன் (62)அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட மாஹே சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநிலக்குழு பொறுப்பில் உள்ளது.மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாஹே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக டி.கே.கங்காதரன் பெயரை கேரளா மாநில செயலாளர் பினராயிவிஜயன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அரசு ஊழியர் சம்மேளனத்தின் மாஹே பகுதி முன்னாள் பொதுச்செயலாளராகவும், பணியாற்றிய காங்காதரன் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் மாஹே, பல்லுhர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதியில் ஓரு தொகுதியான பல்லுhரில் காங்கிர° வேட்பாளர் ஸ்ரீதரனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டார்.அத்தேர்தலில் 1300 வாக்குவித்தியாசத்தில் கங்காதரன் தோல்வியடைந்தார்.அதனை தொடர்ந்து மாஹே நகராட்சி உறுப்பினர் தேர்தலில் பந்தக்கல் வார்டில் பேட்டியிட்டு வெற்றிபெற்றார்.மாஹே பகுதி மக்களின் பிரச்சனைக்களுக்காக தொடர்ந்து பல போரட்டங்களை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற மணைவியும்,சரத்,ஆதர்ஸ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
மாஹே,பல்லுhர் ஆகிய இரண்டு தொகுதிகள் தற்போது தொகுதி மறுசீரமைப்பின்படி ஒரு தொகுதியாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.