புதுச்சேரி பிப் 20
இலா°பேட்டையில் குண்டும் குழியுமான சாலைகளை சரி செய்யக்கோரி மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலா°பேட்டை ஆரம்ப சுகாதாரநிலையத்தை 24மணிநேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெத்துசெட்டிபேட்டை,அசோக்நகர்,குறிஞ்சிநகர்,ஆகிய வார்டுகளில் தேங்கியுள்ள குப்பைகளை துhர்வாரவேண்டும்.சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்கவேண்டும்.வீடற்ற மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி இப்போரட்டம் நடைபெற்றது.
கல்லுhரி சாலையில் நடந்த ஆர்பாட்டத்திற்க்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,ராமச்சந்திரன்,உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன்,சந்துரு,குப்புசாமி,உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.