Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, June 28, 2011

புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி ஜூன் 27
டீசல்,சமையல் கியாஸ்,மண்ணென்னை விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிக்கக்கூடிய பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடணடியாக திரும்ப பெற வேண்டும்.எண்ணை விலை நிர்னைக்கும் உரிமையை மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த இப்போராட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,ராமசாமி,கலிவரதன்,உலகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி செயலாளர்கள் சீனுவாசன்,பத்மநாபன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன்,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ்,கொளஞ்சியப்பன்,சங்கர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.
படம் உள்ளது
Read more...
Saturday, June 25, 2011

CITU and All workers Associatons joint Demonstration - Puducherry

0 comments

CITU and All workers Associatons joint Demonstration against petrol price hike in Puducherry
Read more...
Monday, June 20, 2011

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து

0 comments

புதுச்சேரி ஜூன் 17
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஜடியூ சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிர° கட்சி ஆட்சி பொறுப்பெற்ற ஒரு மாதத்தில் 12க்கும் மேற்பட்ட சிஜடியூ தொழிலாளர்களையும்,தலைவர்களையும் கொள்ளப்பட்டதை கண்டித்தும்.தொழிற்சங்க அலுவலகங்களை திரிணாமுல் காங்கிரஸ் அரசின் தயவோடு அக்கட்சி குண்டர்கள் தாக்கிவருவதை கண்டித்தும்.அரசியல் ரீதியான வன்முறைக்கு மாநில அரசு உடணடியாக முற்றுபுள்ளி வைக்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது.
அண்ணாசாலை பிலால் ஓடடல் அருகில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஜடியூ மாவட்டத்தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சிஜடியூ நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன், சிவக்குமார்,குணசேகரன்,சீனுவாசன்,சுமதி,பாபு,கலியன்,உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Read more...
Monday, June 6, 2011

கூட்டுறவு இயக்கத்தை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டும்

0 comments

புதுச்சேரி ஜூன் 5
கூட்டுறவு இயக்கத்தை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டும் என புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி கூட்டுறவு சங்க ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் ரோஷ்மா திருமணமண்டபத்தில் கூட்டுறவு இயக்கத்தை காப்பாற்றிட ஊழியரின் பணிநிலைமைகள் மேம்பட என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.சங்க கொடியேற்றத்துடன் துவங்கிய கருத்தரங்கத்திற்கு சம்மேளனத் தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார்.அமைப்புச்செயலாளர் புருnஷ்hத்தம்மன் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பேசினார் அப்பொது கூட்டுறவு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தனது அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.முன்னதாக தமிழ்நாடு கூட்டுறவு தொழிலாளர்கள் சம்மேளனம்(சிஜடியூ) பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி,சிஜடியூ புதுவை கூட்டுறவு சங்க கவுரவத்தலைவர் தா.முருகன்,அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத்தவைர் பாலமோகனன்,தலைவர் ஆனந்தராசன்,பொதுச்செயலளர் புகழேந்தி துணைபொதுச்செயலாளர் பிரேமதாசன் ஆகியோர் கருத்தரங்கத்தை வாழ்த்தி பேசினார்கள்.
திரளான ஊழியர்கள் பங்கேற்ற கருத்தரங்கத்தில் கூட்டுறவு சங்க ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு விற்பனை வரி விளக்கு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிரைவேற்றப்பட்டது
Read more...

சோஸலிச சமூகத்தை அமைப்பதற்க்காகவே இந்திய தொழிற்சங்க மையம் துவக்கப்பட்டது

0 comments

புதுச்சேரி ஜூன் 2
சோஸலிச சமூகத்தை அமைப்பதற்க்காகவே இந்திய தொழிற்சங்க மையம் துவக்கப்பட்டது என்று சிஜடியூ தமிழ்மாநில துணைபொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார்.
சிஜடியூ வின் 40வது ஆண்டு நிறைவு விழா புதுச்சேரி சிஜடியூ மாவட்டக்குழு சார்பில் ரெட்டியார் பாளையத்தில் நல்லசிவம் நினைவரங்கத்தில் கொண்டாடபட்டது.இவ்விழாவிற்கு சங்கத்தின் புதுவை மாவட்டத்தவைர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சங்கத்தின் துணைத்தலைவர் நிலவழகன் சிஜடியூ கொடியை ஏற்றி வைத்தார்.மறைந்த தலைவர்கள் பாப்ப உமாநாத் திருவுருவபடத்தை மாவட்டக்குழு உறுப்பினர் வத்ஸலாவும்,புதுச்சேரி முதுபெறும் தோழர் ராமமூர்த்தியின் திருவுருவபடத்தை மாவட்ட துணைத்தவைர் ராஜாங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர்.இவ்விழாவில் சிஜடியூ வின் தமிழ்மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பங்கேற்று பேசினார்.முன்னதாக மாவட்ட செயலாளர் கே.முருகன் அணைவரையும் வரவேற்று பேசினார்.இவ்விழாவில் சிஜடியூ நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,நாராயணன்,பாபு,சதீ°பாபு,மற்றும் திரளான சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Read more...

துப்புரவு பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது குறித்து புதுச்சேரி அரசு சிபிஜ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்

0 comments

புதுச்சேரி மே 26
துப்புரவு பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது குறித்து புதுச்சேரி அரசு சிபிஜ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழுக்கூட்டம் செயற்குழு உறுப்பினர் பி.உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கலந்துகொண்டார்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மக்கள் விரோத கொள்கைகளும்,தவறான ஆட்சி நடைமுறையால் புதுச்சேரி சட்டசபை த்தோர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றி என்.ஆர் காங்கிரஸ்-அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெறச்செய்துள்ளனர்.புதிய அரசு மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும்,முடங்கியுள்ள மக்கள்நலத்திட்டங்களையும்,குவிந்துள்ள மக்கள்பிரச்சனைகளை காலம் தாழ்த்தாமல் முழுமையான அமைச்சரவை அமைத்து சட்டபேரவை கூட்டத்தை கூட்டி நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்லுhரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துவங்குவதோடு அரசு இடஒதுக்கீடான 50 சதவீதத்தை தனியார் கல்லுhரிகளிலிருந்து பெறுவதை உறுதிபடுத்த வேண்டும்.மேலும் குறைக்கப்பட்ட காமராஜர் கல்வி உதவிதொகையை இந்தாண்டு முதல் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லுhரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்கையை துவங்க நடவடிக்கை எடுக்க வெண்டும்.
நிதி மோசடி-கறுப்பு பணப்பதுக்கள் பேர்வழி ஹசன் அலிக்கு போலி பா°போர்ட் எடுத்து கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங்கை ஆளுநர் பதவிலிருந்து நீக்க குடியரசுத்தலைவர் தயக்கம் காட்டுவது கவலையளிப்பதாகும்.இந்தநிலையில் புதுச்சேரி முழுவதும் துப்புரவு பணியை 19 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திற்க்கு ஆளுநர் இக்பால்சிங் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.மேற்படி நிறுவனம் கருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே தனியார் நிறுவனத்திற்கு துப்புரவு பணி ஒப்பந்தம் வழங்கியது குறித்து சிபிஜ விசரானணக்கு உத்திரவிட வேண்டும்.மேலும் இக்பால்சிங் பதவி காலத்தில் அவரால் கையெப்பம் மிட்டு அனுமதிக்கப்பட்ட கோப்புகள் குறித்து மறு ஆய்வு நடத்தி மாநிலத்தின் மரியாதையை பாதுகாக்க வேண்டும்.மேலும் ஆளுநர் இக்பால்சிங்கை இந்திய பதவியிலிருந்து நீக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com