
புதுச்சேரி ஜூன் 27
டீசல்,சமையல் கியாஸ்,மண்ணென்னை விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிக்கக்கூடிய பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடணடியாக திரும்ப பெற வேண்டும்.எண்ணை விலை நிர்னைக்கும் உரிமையை மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த இப்போராட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,ராமசாமி,கலிவரதன்,உலகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி செயலாளர்கள் சீனுவாசன்,பத்மநாபன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன்,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ்,கொளஞ்சியப்பன்,சங்கர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.
படம் உள்ளது