புதுச்சேரி ஜூன் 17
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஜடியூ சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிர° கட்சி ஆட்சி பொறுப்பெற்ற ஒரு மாதத்தில் 12க்கும் மேற்பட்ட சிஜடியூ தொழிலாளர்களையும்,தலைவர்களையும் கொள்ளப்பட்டதை கண்டித்தும்.தொழிற்சங்க அலுவலகங்களை திரிணாமுல் காங்கிரஸ் அரசின் தயவோடு அக்கட்சி குண்டர்கள் தாக்கிவருவதை கண்டித்தும்.அரசியல் ரீதியான வன்முறைக்கு மாநில அரசு உடணடியாக முற்றுபுள்ளி வைக்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது.
அண்ணாசாலை பிலால் ஓடடல் அருகில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஜடியூ மாவட்டத்தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சிஜடியூ நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன், சிவக்குமார்,குணசேகரன்,சீனுவாசன்,சுமதி,பாபு,கலியன்,உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.