
புதுச்சேரி ஜூன் 2
சோஸலிச சமூகத்தை அமைப்பதற்க்காகவே இந்திய தொழிற்சங்க மையம் துவக்கப்பட்டது என்று சிஜடியூ தமிழ்மாநில துணைபொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார்.
சிஜடியூ வின் 40வது ஆண்டு நிறைவு விழா புதுச்சேரி சிஜடியூ மாவட்டக்குழு சார்பில் ரெட்டியார் பாளையத்தில் நல்லசிவம் நினைவரங்கத்தில் கொண்டாடபட்டது.இவ்விழாவிற்கு சங்கத்தின் புதுவை மாவட்டத்தவைர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சங்கத்தின் துணைத்தலைவர் நிலவழகன் சிஜடியூ கொடியை ஏற்றி வைத்தார்.மறைந்த தலைவர்கள் பாப்ப உமாநாத் திருவுருவபடத்தை மாவட்டக்குழு உறுப்பினர் வத்ஸலாவும்,புதுச்சேரி முதுபெறும் தோழர் ராமமூர்த்தியின் திருவுருவபடத்தை மாவட்ட துணைத்தவைர் ராஜாங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர்.இவ்விழாவில் சிஜடியூ வின் தமிழ்மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பங்கேற்று பேசினார்.முன்னதாக மாவட்ட செயலாளர் கே.முருகன் அணைவரையும் வரவேற்று பேசினார்.இவ்விழாவில் சிஜடியூ நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,நாராயணன்,பாபு,சதீ°பாபு,மற்றும் திரளான சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.