Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, July 13, 2011

கருப்பு கொடியுடன் போராட்டம்

0 comments

புதுச்சேரி ஜூலை 12
புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங்கை திரும்பப்பெறக்கோரி கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.
கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள குதிரை பன்னை வியாபாரி ஹசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதும்.அதேப்போல் ஆளுநர் மகன்கள் இடம்பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு அதிகாரத்தை தவறாக பயண் படுத்தி காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்குவதற்கு விண்ணப்பித்த மூன்றே நாளில் தடையில்லா சான்றிதழ் வழங்கிய குற்றத்திலும் புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங்கை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற்று வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ரூ 300கோடிக்கு கழிவுநீர் வாய்க்கால் பணி அமைக்க தவராண நிறுவணத்திற்கு ஆளுநர் ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்று இருப்பதை கண்டித்தும்,டெல்லியில் உள்ள புதுச்சேரி அரசினர் விருந்தினர் மாளிகைளில் பல அறைகளை ஆளுநரின் உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும் ஆளுநர் இக்பால்சிங் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடிகாட்டும் போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கைது
புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடியுடன் போராட்டம நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமச்சந்திரன்,முருகன்,உலகநாதன்,இடைகமிட்டி செயலாளர்கள் சீனிவாசன்,லெனின்துரை,பத்மநாபன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன்,தமிழ்ச்செல்வன்,மணிபாலன்,பிரபுராஜ்,உள்ளிட்ட 120பேரை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.முன்னதாக கருப்புபேட்ஜ் அணிந்து கருப்பு கொடியுடன் ஊர்வலமாக வந்த மார்க்சி°ட் கட்சியின் தலைவர்கள்,தொன்டர்களை ஆளுநர் மாளிகை அருகில் காவல்துறையினரால் தடுத்து நிருத்தி கைது செய்தனர்.
Read more...
Tuesday, July 12, 2011

தண்டோர போட்டு புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம்

0 comments

புதுச்சேரி ஜூலை 9
கருப்பு பண மோசடி மன்னன் ஹசன்அலிக்கு போலி பாஸ்பார்ட் வழங்க பரிந்துரைத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி துனைநிலைஆளுநர் இக்பால்சிங்கை மத்திய அரசு உடனே திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு ஜூலை 12ல் கருப்பு பேட்ஜ் அனிந்து போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை விலக்கி தண்டோர போட்டு புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது.பிரச்சாரத்தில் சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நிலவழகன்,ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டன
Read more...
Thursday, July 7, 2011

புதுச்சேரி கவர்னரை நீக்ககோரி

0 comments

புதுச்சேரி ஜூலை 6
புதுச்சேரி கவர்னரை நீக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு பேட்ஜ் அனிந்து போராட்டம் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது,
கருப்பு பணமோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள குதிரை பண்ணை வியாபாரி அசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாள் விசாரித்தனர்.இந்நிலையில் கவர்னர் குற்றவாலி என்பது நிருபணமாகியுள்ளது.மேலும் தனது மகன்கள் இடம்பெற்றுள்ள சவுத் டிரஸ்டிக்கு காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்க தனது அதிகாரத்தை தவராகபயன்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளார்.மேலும் அரசுவிதிமுறைகளை மீறி கவர்னர் மருத்துவகல்லுhரி துவங்ககுவதற்கு உடந்தையாக இருந்த தலைமை செயலாளர் சந்திரமோகன் கல்லுhரி துவங்க அனுமதி அளித்துவிட்டு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய முன்னால் முதல்வர் வி.வைத்தியலிங்கம் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துவதோடு.மேலும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கவர்னரை உடணடியாக நீக்கக்கோரி குடியரசு தலைவர்,உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி,மத்திய உள்துறை அமைச்சகம்,தலைமை ஊழல் கண்கானிப்பாளர் ஆகியோர்களுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கவர்னர் இக்பால்சிங்கை நீக்ககோரி ஜூலை 8 ஆம்தேதி புதுச்சேரி காரைக்காலில் தன்டோர போட்டு பிரச்சாரம் செய்யப்படும் அதனை தொடர்ந்து ஜூலை 12 ல் கவர்னர் மாளிகை முன்பு கருப்பு பேட்ஜ் அனிந்து கண்டன ஆர்ப்பாட்டமும் கட்சியின் சார்பில் நடைபெறுகிறது இவ்வாறு கூறினார்கள்.
Read more...

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கொலை வெறி தாக்குதலை கண்டித்து

0 comments

புதுச்சேரி ஜூலை 5
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கொலை வெறி தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் தெரு முனைப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் ஆதரவோடு ஆட்சி பொருப்பேற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த 40 நாட்களில் 20க்கும் மேற்பட்ட மார்க்சி°ட் ஊழியர்களை படுகொலை செய்துள்ளதை கண்டித்தும்.கொள்ளப்பட்ட ஊழியர்களின் குடுபங்களை பாதுகாக்க பொதுமக்களிடம் நிதி திரட்டும் இயக்குமும் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி நகரம்
புதுச்சேரி நகரகமிட்டி சார்பில் நேருவீதி காந்திவீதி சந்திப்பில் துவங்கிய பிரச்சாரத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,கமிட்டிஉறுப்பினர்கள்,கிளைசெயலாளர்கள் மதிவானன்,ரமேஷ்,சிவசோலை,அழகர்ராஜ்,துரைமுருகன்,மணவாளன்,சரவணன்,பாலாஜி,முன்னா,சிஜடியூ இணைச்செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
காந்திவீதியில் துவங்கிய நிதி திரட்டும் இயக்கம் பு°சிவீதி,அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
உழவர்கரை
உழவர்கரை நகர கமிட்டி சார்பில் பெத்துசெட்டி பேட்டையில் நடந்த நிதி திரட்டும் இயக்கத்திற்கு கமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நிதி வசூல் இயக்கத்தை துவக்கிவைத்தார்.கமிட்டி உறுப்பினர் நடராஜன் மற்றும் சத்தியா,பாஸ்கர்,முருகதாஸ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
Read more...
Sunday, July 3, 2011

இடதுமுன்னணி மீதான வன்முறையை நிறுத்துக! மம்தா அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம்

0 comments
சென்னை, ஜூலை 2-

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் மீது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்கள் நடத்தி வருவதைக் கண்டித்தும், அதனை எதிர்கொண்டு உறுதியோடு போராடி வரும் இடதுமுன்னணியின் தோழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடுதழுவிய இயக்கம் வெள்ளியன்று (ஜூலை 1) தொடங்கியது.

சென்னையில் இந்த பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மக்கள வைக்குழுத் தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யா எம்.பி. பேசினார்.

சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன், பார்வர்டு பிளாக் மாநிலச் செயலாளர் பி.வி.கதிரவன் எம்எல்ஏ, தென் சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ் எம்எல்ஏ, வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

தமிழகம்முழுவதும் ஒருவார காலம் நடைபெறும் இந்த இயக்கத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கருத்தரங்குகள், பேரணி, ஆர்ப்பாட்டம் என பல வடிவங்களில் இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு இதுவரை மம்தா கட்சியினரும் மாவோயிஸ்டு களுமாகச் சேர்ந்து சுமார் 400 தோழர்களின் உயிரைப் பறித்துள்ளனர்.அவர்களது குடும்பங் களைப் பாதுகாப்பதற்கான நிதி திரட்டலும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இப்பிரச்சார இயக்கத்தையொட்டி, மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணியினர் மீது கொடிய வன்முறையை ஏவியிருப்பதன் மூலம் ஜனநா யகத்தின் மீது மம்தா அரசு நடத்தும் தாக்குதலை விவரித்து கட்சியின் சார்பில் பிரசுரம் வெளி யிடப்பட்டுள்ளது.

நாடு தழுவிய இந்த இயக்கம் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா,ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ் தான், ஜம்மு-காஷ்மீர், அசாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் துவங்கியுள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற இயக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் உத்தவ் பர்மன் பங்கேற்று உரையாற் றினார். இவ்வியக்கத்தைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் அரசின் காவல்துறையினர் முயற் சித்தனர்.

பஞ்சாபில் பல்வேறு நகரங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. மகில்பூரில் நடைபெற்ற பேரணியில் மாநில செயற்குழு உறுப்பினர் ரகுநாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read more...

AIAWU pressures Puducherry Government to implement Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (NREGS)

0 comments
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com