சென்னை, ஜூலை 2-
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் மீது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்கள் நடத்தி வருவதைக் கண்டித்தும், அதனை எதிர்கொண்டு உறுதியோடு போராடி வரும் இடதுமுன்னணியின் தோழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடுதழுவிய இயக்கம் வெள்ளியன்று (ஜூலை 1) தொடங்கியது.
சென்னையில் இந்த பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மக்கள வைக்குழுத் தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யா எம்.பி. பேசினார்.
சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன், பார்வர்டு பிளாக் மாநிலச் செயலாளர் பி.வி.கதிரவன் எம்எல்ஏ, தென் சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ் எம்எல்ஏ, வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
தமிழகம்முழுவதும் ஒருவார காலம் நடைபெறும் இந்த இயக்கத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கருத்தரங்குகள், பேரணி, ஆர்ப்பாட்டம் என பல வடிவங்களில் இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு இதுவரை மம்தா கட்சியினரும் மாவோயிஸ்டு களுமாகச் சேர்ந்து சுமார் 400 தோழர்களின் உயிரைப் பறித்துள்ளனர்.அவர்களது குடும்பங் களைப் பாதுகாப்பதற்கான நிதி திரட்டலும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இப்பிரச்சார இயக்கத்தையொட்டி, மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணியினர் மீது கொடிய வன்முறையை ஏவியிருப்பதன் மூலம் ஜனநா யகத்தின் மீது மம்தா அரசு நடத்தும் தாக்குதலை விவரித்து கட்சியின் சார்பில் பிரசுரம் வெளி யிடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய இந்த இயக்கம் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா,ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ் தான், ஜம்மு-காஷ்மீர், அசாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் துவங்கியுள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற இயக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் உத்தவ் பர்மன் பங்கேற்று உரையாற் றினார். இவ்வியக்கத்தைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் அரசின் காவல்துறையினர் முயற் சித்தனர்.
பஞ்சாபில் பல்வேறு நகரங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. மகில்பூரில் நடைபெற்ற பேரணியில் மாநில செயற்குழு உறுப்பினர் ரகுநாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sunday, July 3, 2011
Subscribe to:
Post Comments (Atom)