Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, July 13, 2011

கருப்பு கொடியுடன் போராட்டம்

0 comments

புதுச்சேரி ஜூலை 12
புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங்கை திரும்பப்பெறக்கோரி கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.
கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள குதிரை பன்னை வியாபாரி ஹசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதும்.அதேப்போல் ஆளுநர் மகன்கள் இடம்பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு அதிகாரத்தை தவறாக பயண் படுத்தி காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்குவதற்கு விண்ணப்பித்த மூன்றே நாளில் தடையில்லா சான்றிதழ் வழங்கிய குற்றத்திலும் புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங்கை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற்று வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ரூ 300கோடிக்கு கழிவுநீர் வாய்க்கால் பணி அமைக்க தவராண நிறுவணத்திற்கு ஆளுநர் ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்று இருப்பதை கண்டித்தும்,டெல்லியில் உள்ள புதுச்சேரி அரசினர் விருந்தினர் மாளிகைளில் பல அறைகளை ஆளுநரின் உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும் ஆளுநர் இக்பால்சிங் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடிகாட்டும் போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கைது
புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடியுடன் போராட்டம நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமச்சந்திரன்,முருகன்,உலகநாதன்,இடைகமிட்டி செயலாளர்கள் சீனிவாசன்,லெனின்துரை,பத்மநாபன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன்,தமிழ்ச்செல்வன்,மணிபாலன்,பிரபுராஜ்,உள்ளிட்ட 120பேரை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.முன்னதாக கருப்புபேட்ஜ் அணிந்து கருப்பு கொடியுடன் ஊர்வலமாக வந்த மார்க்சி°ட் கட்சியின் தலைவர்கள்,தொன்டர்களை ஆளுநர் மாளிகை அருகில் காவல்துறையினரால் தடுத்து நிருத்தி கைது செய்தனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com