
புதுச்சேரி ஜூலை 6
புதுச்சேரி கவர்னரை நீக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு பேட்ஜ் அனிந்து போராட்டம் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது,
கருப்பு பணமோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள குதிரை பண்ணை வியாபாரி அசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாள் விசாரித்தனர்.இந்நிலையில் கவர்னர் குற்றவாலி என்பது நிருபணமாகியுள்ளது.மேலும் தனது மகன்கள் இடம்பெற்றுள்ள சவுத் டிரஸ்டிக்கு காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்க தனது அதிகாரத்தை தவராகபயன்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளார்.மேலும் அரசுவிதிமுறைகளை மீறி கவர்னர் மருத்துவகல்லுhரி துவங்ககுவதற்கு உடந்தையாக இருந்த தலைமை செயலாளர் சந்திரமோகன் கல்லுhரி துவங்க அனுமதி அளித்துவிட்டு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய முன்னால் முதல்வர் வி.வைத்தியலிங்கம் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துவதோடு.மேலும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கவர்னரை உடணடியாக நீக்கக்கோரி குடியரசு தலைவர்,உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி,மத்திய உள்துறை அமைச்சகம்,தலைமை ஊழல் கண்கானிப்பாளர் ஆகியோர்களுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கவர்னர் இக்பால்சிங்கை நீக்ககோரி ஜூலை 8 ஆம்தேதி புதுச்சேரி காரைக்காலில் தன்டோர போட்டு பிரச்சாரம் செய்யப்படும் அதனை தொடர்ந்து ஜூலை 12 ல் கவர்னர் மாளிகை முன்பு கருப்பு பேட்ஜ் அனிந்து கண்டன ஆர்ப்பாட்டமும் கட்சியின் சார்பில் நடைபெறுகிறது இவ்வாறு கூறினார்கள்.