புதுச்சேரி,ஏப்ரல்-25 மேற்குவங்கத்தில் கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்திய மம்தா அரசை கண்டித்து புதுச்சேரியில் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரல்மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரது பற்றிய தகவல்களை பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டது.நுhலகங்களுக்கு நாளிதழ்கள் வாங்குவதில் தடை உத்தரவுப் பிறபித்த மம்தா அரசை விமர்சித்து ஜாதவ்பூர ் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா தனது வலைதளத்தில் கார்ட்டுன் வரைந்த வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.அவரது உடைமைகளை மம்தா அரசால் சூரையாடப்பட்டது ஆகியவை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி செயலாளர் இரகு.அன்புமணி தலைமை தாங்கினார்.திராவிடப் பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன்,எழுத்தாளர் முனைவர் க.பஞ்சாங்கம்,தமுஎகச- வின் மாநில பொருளாளர் சு.இராமச்சந்திரன்,மூத்த பத்திரிக்கையாளர் தணிகைத்தம்பி,முனைவர் தமிழ்மல்லன்,கவிஞர் ரமேஷ்பைரவி,மஞ்சக்கல் உபேந்திரன்,எல்லை சிவக்குமார்,எழுத்தாளர் குமாரகிருஷ்ணன்,தயாளன்,பாவலர்.மு.பாலசுப்பிரமணியன்,சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன்,டிஒய்எப்ஐ பிரதேச துணை தலைவர் சரவணன்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.முன்னதாக மேற்கு வங்கத்தில் கருத்துரிமையை பாதுகாக்க வலியுறுத்தி கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் மம்தா அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
Read more...
6வது நாளாக புதுவை மாணவர்கள் போராட்டம்..!
முல்லை பெரியார் அணை விவகாரம்
சோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்
அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி
6வது நாளாக புதுவை பல்கலைகழகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..!
புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியார் அணை விவகாரம்
முல்லைப் பெரியாறு பிரச்சினையில், இரு மாநிலங்களுக்கிடையே பகைமை இல்லாமல், சுமூகமானத் தீர்வை காணவேண்டும்
சோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்
வரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார்
அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி
உலக முதலாளித்துவத்தின் சூதாட்டமைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம்
Wednesday, April 25, 2012
Saturday, April 14, 2012
புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை

புதுச்சேரி,ஏப்ரல்-14
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தப்பட்டது.
டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு முதல்வர் என்.ரங்கசாமி,சபாநாயகர் சபாபதி,ஆங்கிலோ பிரேஞ்சு டெக்°டைல் தலைவர் பாலன்,அமைச்சர்கள்,தியாகராஜன்,ராஜவேல்,பன்னீர்செல்வம்,மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அனிவித்து மறியாதை செலுத்தினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இதேப்போல் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நிலவழகன்,முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பொதுசெயலாளர் இராமசாமி,நிர்வாகிகள் லெயோன்,தவமணி,கலிவரதன்,தமிழ்செல்வன்,பாலமோகனன்,சண்முகம்,சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.டிஒய்எப்ஜ சார்பில் புதுச்சேரி முழுவதும் உள்ள கிளைகளில், தெருமுனைகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கர் உருபடத்திற்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.
தோழர் என்.வரதராஜன் மறைவையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தின

புதுச்சேரி,ஏப்ரல்-14
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.வரதராஜன் மறைவையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும்,சுதந்திர போராட்டவீராருமான தோழர் என்.வரதராஜன் மறைiக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் நடைபெற்றது.சிபிஎம் பிரதேசகுழு அலுவலகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,சிபிஜ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,துனை செயலாளர் கீதநாதன்,திமுக மாநில நிர்வாகிகளில் ஒருவர் ராஜ்பவன் பாலா ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் பாவாணன்,இந்திகுடியரசு கட்சி தலைவர் லெயோன்,பார்வர்டுபிளாக் கட்சி தலைவர் முத்து,புரட்சிகர சோஸலி°ட் கட்சி தலைவர் லெனின்,அருந்ததியினர் சங்க தலைவர் தவமணி உள்ளிட்டோர் பங்கேற்று மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தி பேசினர்.முன்னதாக மார்க்சி°ட் கட்யினர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தோழர் என்.வரதாஜன் உருவபடத்திற்கு மலர்துhவி அஞ்சலி செலுத்தினர்.
Friday, April 6, 2012
ஜி கட் ஹவு, சூர்யா ஹெரி டேஜ், லிட்டில் பேர்ள் ஆகிய மூன்று தங்கும் விடுதிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார்கள்
புதுச்சேரி, ஏப். 5-
சட்டமன்ற கூட்டத் தின் போது மாவட்ட ஆட்சியர் விடுமுறையிலிருந்தது குறித்து புதுச்சேரி அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து கட்சியின் பிரதேசச் செயலாளர் வெ. பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-
புதுச்சேரி சட்டமன்றம் கூட்டம்நடைபெறும் நேரத்தில் மாவட்ட ஆட்சியர் இருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. எனவே விடுமுறையில் சென் றாரா? விடுமுறையில் செல்ல நிர்பந்திக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் மக்கள் மத் தியில் எழுந்துள் ளது.
சமீபத்தில் ஜி கட் ஹவு, சூர்யா ஹெரி டேஜ், லிட்டில் பேர்ள் ஆகிய மூன்று தங்கும் விடுதிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் எழுந்தது. இதன் மீது உரிய விசாரணை நடத்தி விடுதி களை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தொடர் இயக்கங் களை நடத்தியது. இதன் விளைவாக மாவட்ட ஆட் சியர் உரிய விசாரனை நடத்தி அந்த விடுதிகளை மூட உத்தரவிட்டார்.இந்நிலையில், ஆட்சியாளர்களை காப்பாற்றும் பொருட்டு அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் தடை செய்ய வேண்டும் என சிலர் முயற்சித்துள்ளதாக கூறப் படுகிறது. இது ஆட்சிய ருக்கு நெருக்கடியை ஏற்ப டுத்தியுள்ளது. மேலும் தானே புயல் நிவாரணம் வழங்கு வதில் அரசியல் தலையீடு இருந்துள்ளது. இதேப் போல் ஏனாம் பிரச்சனைக்கு சட்டப்படி செயல்பட்ட மாவட்ட துணை ஆட்சி யர்,துணை ஆய்வாளர் ஆகியோரை இடமாற்றம் செய்யும் பணியும் நடந்துள் ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப் பதை எடுத் துக்காட்டுகிறது. எனவே மாவட்ட ஆட் சியர் விடுமுறை விவகாரம், மூன்று விடுதிகளின் நடவ டிக்கை குறித்து புதுச்சேரி அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் இவ்வாறு பெருமாள் தெரிவித்துள்ளார்
Sunday, April 1, 2012
நகராட்சி ஊழியர்களுக்கு அரசே ஊதியம் வழங்க வேண்டும்

புதுச்சேரி,மார்ச்-28
நகராட்சி ஊழியர்களுக்கு அரசே ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5வது ஊதியக்குழு அறிவித்த 21 ஆண்டு பணிமுடித்த ஊழியர்களுக்கு ஏசிபியை உடனே வழங்க வேண்டும்.பணிகாலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு மற்றும் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் மற்றும் பணிக்கொடை காலத்தோடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கம்பன் கலையரங்கத்தில் இருந்து பேரணியாக சென்று சட்டமன்றம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு உழவர்கரை நகராட்சியின் தொழிற்சங்க கூட்டுகுழுவின் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஏஐடியுசி பொதுசெயலாளர் அபிஷேகம்,ஏடியு சங்க தலைவர் பாப்புசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பழனிவேல்,ராமச்சந்திரன்,பொன்னம்பலம் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Subscribe to:
Comments (Atom)
