Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, April 25, 2012

மேற்குவங்கத்தில் கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்திய மம்தா அரசை கண்டித்து

0 comments
புதுச்சேரி,ஏப்ரல்-25 மேற்குவங்கத்தில் கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்திய மம்தா அரசை கண்டித்து புதுச்சேரியில் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரல்மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரது பற்றிய தகவல்களை பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டது.நுhலகங்களுக்கு நாளிதழ்கள் வாங்குவதில் தடை உத்தரவுப் பிறபித்த மம்தா அரசை விமர்சித்து ஜாதவ்பூர
் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா தனது வலைதளத்தில் கார்ட்டுன் வரைந்த வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.அவரது உடைமைகளை மம்தா அரசால் சூரையாடப்பட்டது ஆகியவை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி செயலாளர் இரகு.அன்புமணி தலைமை தாங்கினார்.திராவிடப் பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன்,எழுத்தாளர் முனைவர் க.பஞ்சாங்கம்,தமுஎகச- வின் மாநில பொருளாளர் சு.இராமச்சந்திரன்,மூத்த பத்திரிக்கையாளர் தணிகைத்தம்பி,முனைவர் தமிழ்மல்லன்,கவிஞர் ரமேஷ்பைரவி,மஞ்சக்கல் உபேந்திரன்,எல்லை சிவக்குமார்,எழுத்தாளர் குமாரகிருஷ்ணன்,தயாளன்,பாவலர்.மு.பாலசுப்பிரமணியன்,சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன்,டிஒய்எப்ஐ பிரதேச துணை தலைவர் சரவணன்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.முன்னதாக மேற்கு வங்கத்தில் கருத்துரிமையை பாதுகாக்க வலியுறுத்தி கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் மம்தா அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com