புதுச்சேரி அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கலந்து கொண்டு பேசினார்.இக்கூட்டத்தல் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மக்கள் விரோத காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது.ஆனால் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு செயல்படவில்லை.வீடுகட்டும் மானியம்,சென்டாக் கல்வி உதவி,இலவச அரிசி,ரொட்டிபால்திட்டம்……... போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.தேர்தல்கால வாக்குறுதிகளும் அறிவிப்போடு நிர்கிறது.இரண்டு மடங்கு மின்கட்டண உயர்வு,பால்விலை உயர்வு,மதிப்புக்கூட்டிய வரி என மக்கள் மீது விலை உயர்வு ,வரிஉயர்வு திணிக்கப்படுகிறது.மொத்தத்தில் மத்திய காங்கிரஸ் அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு உரிய நிதி வழங்குவதில் செய்யும் வஞ்சகமும்,மாநில அரசின் தவறான அனுகுமுறையும் மாநில மக்களை படுமோசமாக பாதித்து வருகிறது.
2013-2014 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாநில அரசு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, சமூகப் பொருளாதாரத்தை உயர்த்திட வளர்ச்சித்திட்டங்களுக்கு மாநில அரசு முனனூரிமை அளித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு வலியுறுத்துகிறது.விளைநிலங்கள் பயன்பாட்டு சட்டம் இயற்றி விளை நிலங்களை பாதுகாத்து, விவசாயத்தையும்,தொழில் வளர்ச்சிக்கு முன்னூரிமை அளித்திட வேண்டும்.கிராமப்புற வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதோடு நகர்புற ஏழைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவது,பொதுவினியோக திட்டத்தை வலுப்படுத்துவது வீடில்லாத ஏழைகளுக்கு இலவச மணைப்பட்டா,வீடுகட்டும் மானியம் சென்டாக் கல்வி உதவி நிதி,மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுகளாக தர வேண்டிய இலவச அரிசி உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை,அடிப்படை வசதியின்மை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு இடையில் 10,12ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிகளுக்கு வரும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்திட வேண்டும்.
அரசு பொது மருத்துவனையில் இயற்கை சுவாசக் கருவிகள் பலது செயலற்ற நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்படவில்லை. தேவையான உப கரணங்கள்,படுக்கைகள் இல்லை.அரசுப் பொது மருத்துவமனை,மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவனைகளையும் மேம்படுத்தி அனைவருக்கும் மருத்துவ சிகிச்சையை உறுதிபடுத்திட தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.ஆகவே மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் பாதுகாத்திட,சமூக பொருளாதாரம் உயர்ந்திட வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னூரிமை அளித்திட மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.