Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, July 1, 2013

பால்டெக்னிக் மாணவர்களுக்கான சென்டாக் இடஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ளபடி நுழைவுத் தேர்வை தொடர்ந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-1
பால்டெக்னிக் மாணவர்களுக்கான சென்டாக் இடஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ளபடி நுழைவுத் தேர்வை தொடர்ந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,

பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேர்வதற்கு ஒவ்வொரு துறையிலும் 12இடங்கள் சேர்க்கப்படுகின்றன.அந்த இடங்களுக்கு சென்டாக் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இதனால் தகுதியும்,திறமையும் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் போட்டிபோட்டு பெரும் பகுதி இடங்களை கைப்பற்றி பயின்று  வருகின்றனர்.தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.இந்நிலையில் மாநில அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிற நுழைவத்தேர்வை ரத்து செய்து நடப்பு கல்வியாண்டு முதல் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் அன்று அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கிறது.
மத்திய காங்கிரஸ் அரசு ரிலையன்ஸ் நிறுவனம் கொழுப்பதற்கு எரிவாயு விலையை இரண்டு மடங்காக உய்ர்த்தியதைப்போல புதுச்சேரி என்.ஆர்.காங்கிர° அரசு தனியார் பாலிடெக்னிக் நிறுவனங்களின் இலாபத்திற்கு  வழிவகுக்கும் வகையில்  நுழைவுத்தேர்வை ரத்து செய்தது ஏற்க முடியாது.இத்தயை தவறான முடிவை அரசு எடுத்ததிற்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டது.என்று புதிராக உள்ளது.ஆகவே,மாநில முதல்வர் உடனடியாக தலையிட்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களின் திறன்,பெற்றோர்களின்  கல்வி மற்றும் பணம் செலுத்தும் தகுதியை அடிப்படையாகக்  கொண்டு சேர்க்கப்படுகிறர்கள்.சில தனியார் கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க +2 வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 11-ம் வகுப்பிலேயே துவங்குகின்றன.இதனால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று சென்டாக் இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதி இடங்களை பிடிக்கின்றார்கள்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ,அடிப்படை வசதியின்மை,குடும்பத்தின் வறுமை நிலையிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சென்டாக் இடஒதுக்கீட்டில்  உயர்கல்வி வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளன.ஆகவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சென்டாக்கில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்னுக்கு வந்துள்ளன.
மேலும் தனியார் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசின்முடிவை மாற்றியதின் மூலம் யார் யார் எத்தகைய ஆதாயம் அடைந்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் மாநில அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதும்,மறுபுறத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு முடிவுக்கு கட்டுப்பட மறுக்கிறது எனறு பேசுவதும் மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையாகும்.ஆகவே மாநில அரசு கல்வி முறையில்  மாற்றத்தையும்,தனியார் கல்வி நிறுவனங்களின் மீது  சமூக கட்டுப்பாட்டை  ஏற்படுத்தவும்,மாநில அரசு முன்வர வேண்டும்.
மேலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி  மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு நடைமுறையை தொடர வேண்டும் என மார்க்சி°ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com