புதுச்சேரி,ஜுலை-1
சாதி மறுப்பு திருமணம் செய்த காதல்கஜோடியிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்த காதல்கஜோடியிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி வீமகவுன்டம்பாளைய ஓடைத்தெருவை சேர்ந்தவர் கே.சண்முகம் இவரது மகன் விஜயகுமார் (வயது 31).அதே தெருவை சேர்ந்த எ.சவரிமுத்துவின் மகள் ஆரோக்கியமேரி (வயது 25) ஆகியோர் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஜயகுமாரும்-ஆரோக்கியமேரியும் கடலூரில் பதிவு திருமணம் செய்துள்ளனர்.ஆரோக்கிய மேரி தலித் கிருத்துவ பிரிவை சேர்ந்தவர் என்பதாலும், வன்னியர் சமுகத்தை சேர்ந்த சண்முகம் குடும்பத்தில் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,சண்முகத்தை அடித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சமடைந்த னர்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாளிடம் நடந்த சம்பவத்தை கூறியதுடன் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு கொண்டனர்.உடனே சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் புதுச்சேரி காவல்துறை முதுநிலை கண்கானிப்பாளர் பர்வே°அகமதுவை சந்தித்து புகார் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரி காதல்ஜோடியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு டிநகர் காவல்நிலைய உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
