Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, May 31, 2011

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0 comments
புதுச்சேரி, மே 30-

ஒப்பந்த தொழிலாளர் களுக்கு முதல் வாரத்தி லேயே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் 7 ஆம் தேதிக்குள் சம்பள பட்டுவாடா செய்ய வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ யை முறையாக பிடித்தம் செய்து கட்ட வேண்டும், சமவேலைக்கு சமஊதி யத்தை அமல்படுத்த வேண் டும், சட்டவிரோத சம்பள வெட்டை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ் என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதி ரில் நடந்த இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் முருகையன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சங்கரன், ஒப் பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமார், மாநில உதவி தலைவர் தமிழ்வேந்தன், உதவி செய லாளர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் திர ளான ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Read more...
Tuesday, May 17, 2011

CPI(M) DEMONSTRATION AGAINST PETROL PRICE HIKE

0 comments
CPI(M) DEMONSTRATION AGAINST PETROL PRICE HIKE NEAR AJANTHA SIGNAL

BSNL union employee struggle against petrol price hike

CITU demontration against petrol price hike
CPI(M) Ozhavakarai commiitee demonstration against petrol price hike
DREU Employee Union Staged demonstration inside campus of Puducherry Railway Station for Various demand for improvement of railway station and against petrol price hike.
Read more...
Sunday, May 8, 2011

புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங்கை திரும்பபெறக்கோரி கையெழுத்து இயக்கம்

0 comments

புதுச்சேரி மே 8
புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங்கை திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கருப்பு பணமோசடி மன்னன் ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த வழக்கிளும் புதுச்சேரி அமைச்சரவைக்கே தெரியாமல் தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிற்கு காரைக்காலில் மருத்துவ கல்லுhரி துவங்க தடை இல்லா சான்றிதழ் வழங்கிய குற்றத்திலும் சிக்கியுள்ள ஆளுநர் இக்பால்சிங்கை உடனே மத்திய அரசு திரும்பபெறக்கோரி புதுச்சேரி முழுவதும் பல்வேறு கட்ட போரட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து புதுச்சேரி மக்களிடையே கையெழுத்து நடைபயண இயக்கம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி நேருவீதியில் சனிக்கிழமை துவங்கிய இவ்வியக்த்திற்கு நகர கமிட்டி செயலாளர் ஜி.சீனூவாசன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் கண்டன உரையாற்றினார்.செயற்துகுழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,உழவர்கரை செயலாளர் லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் திரளாக கருப்பு பேட்ஜ் அனிந்தவாறு பங்கேற்றனர்.முன்னதாக நேருவீதியில் துவங்கிய நடைபயண இயக்கம் மிஷ்ன் வீதி,ரங்கபிள்ளைவீதி உள்ளிட்ட புதுச்சேரி நகரம் முழுவதும் நடைபெற்றது. அப்போழுது நுhற்றுக்கனக்கான மக்களை சந்தித்து கையெப்பம் பெறப்பட்டது.திங்கள்கிழமையும்,செவ்வாய்கிழமையும் இவ்வியக்கம் நடைபெறுகிறது.
Read more...
Friday, May 6, 2011

CITU and All Auto union federation demonstration against illegal two wheelers renters

0 comments

புதுச்சேரி மே 6
இரண்டு சக்கர மோட்டார் வாடகை நிலையங்களை தடை செய்யக்கோரி சிஜடியூ உள்ளிட்ட அனைத்து ஆட்டோ சங்கங்களின் சார்பில் புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுளாவாசிகளிடம் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களை வாடகைக்கு விடப்படுவதை தடுக்க வேண்டும். மிஷ்ன் வீதியில் இயங்கி கொண்டிருக்கும் வாடகை நிலையங்களில் உள்ள இரண்டு சக்கர மோட்டார் வாகணங்களை போக்குவரத்து துறை பறிமுதல் செய்ய வெண்டும் என்பன கோரிக்கைகளை வலியுருத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நேருவிதியில்- மிஷ்ன் வீதிசந்திப்பில் நடந்த இத்தர்ணா போராட்டத்திற்கு புதுவை மாநில ஆட்டோ சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.சிஜடியூ ஆட்டோ சங்கத் பொதுச்செயலாளர் சீனூவாசன் முன்னிலை வகித்தார்.சிஜடியூ ஆட்டோ சங்கத் கவுரவத் தலைவர் தா.முருகன்,சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன்,சங்கத்தலைவர் ராஜாங்கம்,ஏஜடியூசி மாநில பொதுச்செயலாளர் அபிnஷ்கம்,அண்ணா தொழிற்சங்கத் தலைவர் பாப்புசாமி,ஜஎன்டியூசி சங்த் நிர்வாகி குமார்ஆகிnய்hர் பங்கேற்று பேசினார்கள்.இப்போராட்டத்தில் அனைத்து ஆட்டோ சங்கங்களை சேர்ந்த திரளான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
Read more...
Thursday, May 5, 2011

CPI(M) DEMONSTRATION AT PUDUCHERRY AGAINST SRILANKAN GOVERNMENT FOR KILLING CIVILIAN TAMILIANS

0 comments

புதுச்சேரி மே 5
இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழர்களின் உயிரிழப்புகளுக்கும்,மனித உரிமை மீறல் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.உயிரிழப்பு ஏற்படுத்த காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். முள்வேளி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை மறு குடியமர்த்தபட வேண்டும்.தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி வழங்ககுவதற்கு இந்திய அரசு தனது ராஜ்ய உறவை பயண்படுத்த வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நேருவீதி-காந்திவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்ச்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் தலைமை தாங்கினார்.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன்,விருது நகர் மாவட்ட செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்கள்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமச்சந்திரன்,கலிவரதன்,முருகன்,உலகநாதன், மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.முன்னதாக இலங்கை ராஜபக்சே அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.
Read more...
Monday, May 2, 2011

அடக்கு முறைகளை பின்னுக்கு தள்ளிய தொழிலாளி வர்க்கம் - உ.வாசுகி

0 comments


புதுச்சேரி மே 2
மெகா ஊழல்களால் ஏழை மக்களின் நலத்திட்டங்கள் முடக்கபடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டினார்.
சிஜடியூ-ஏஜடியூசி தொழிற்சங்கள் சார்பில் புதுச்சேரி சிங்காரவேலர் சதுக்கத்தில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஏஜடியூசி மாநில பொதுச்செயலாளர் வி.எஸ்.அபிnஷ்கம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில் ,சிகாகோ நகரில் 8 மணிநேரம் வேலை உரிமைக்காக போராடிய தொழிலாளர்களை காவல்துறை வைத்து அடக்கு முறையை கையாண்டனர்.அத்தகைய அடக்கு முறைகளை பின்னுக்கு தள்ளிய தொழிலாளி வர்க்கம் சுனாமி பேரலைகளை போல் ஒரு நாள் எழும்.போராடி பேற்ற உரிமைகளை இன்றைக்கு நம்மை ஆளுகின்ற அரசுகள் பரித்து வருகிறது.கடந்த மாதங்களில் மத்திய மன்மோகன் சிங் அரசு இரண்டுதொழிலாளர் விரோத மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.அதில் அரசு ஊழியர்களின் பென்சன் தொகையை பங்குசந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்க வழிவகை செய்யும் மசோத மற்றொன்று 40 தொழிலாளர்களுக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பொருந்தாதது என வலியுறுத்தும் மசோதாகளை பிஜேபி அனுமதியோடு மத்திய அரசு தாக்கள் செய்தது.கடந்த காலங்களில் இடது சாரி கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த போது தொழிலாளர் விரோத சட்டங்களை திருத்தும் மசோதாக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க பட வில்லை.ஆனால் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியும் பிஜேபியும் தொழிலாளர்களின் உரிமைகளை பரித்து வருகின்றனர்.2ஜி ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டில் 80ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை முதலில் தாக்கல் செய்துள்ள சிபிஜ ஏன் ஒரு பக்கத்தில் கூட திமுக வின் கனிமொழி பெயரையும்,கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் பெயரை சேர்க்கவில்லை? தற்போது துனை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்து இருப்பதின் மூலம் கலைஞர் அரசிற்கு சிபிஜ மறைமுகமாக சிபாரிசு செய்யவில்லையா? காமன் வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த புகார் எழுந்த போது டில்லி காங்கிர° அரசு கண்டு கொல்ல வில்லை.தற்போது கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்பெக்ட்ரம்,காமன் வெல்த்போட்டி,ஆதர்ஸ் குடியிருப்பு உள்ளிட்ட மெகா ஊழல்களால் நாட்டின் வளர்ச்சி தடுக்கபடுகிறது.ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்கள் முடக்கப்படுகிறது.ஊழல்களை எதிர்த்து உழைப்பாளி மக்கள் போராடவேண்டும்.இவ்வாறு உ.வாசுகி பேசினார்.முன்னதாக சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன்,ஏஜடியூசி மாநில தலைவர் ஆர்.விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.முன்னதாக பெரியார் சிலையிலிருந்து துவங்கிய மேதின பேரணியில் இரண்டயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
படம் உள்ளது
Read more...

May day programs at Puducherry

0 comments
புதுச்சேரி மே 1
இந்தியன் காபி ஹவுஸ் கட்டிடத்தின் புதுபிக்கும் பாணியை உடனே துவங்க வேண்டும் என்று காபி ஹவுஸ் தொழிலாளர்களின் பாதுகாப்பு மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்தியன் காபி ஹவுஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஜடியூ)மாநாடு அஜிஸ்நகர் ரெட்டியார்பாளைத்தில் நடைபெற்றது.காந்தி அரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.துணை தலைவர் விஜயன் மாநாட்டு பிரதிநிதிகளை வரவேற்று பேசினார்.சங்கத்தின் கௌரவத்தலைவர் தா.முருகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.மாநாட்டின் அறிக்கையை சங்க செயலாளர் கே.ராமச்சந்திரன் வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள், சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனூவாசன் ஆகியோர் பேசினார்கள்.நுhற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருhமாறு,

புதுச்சேரி நேருவீதியில் உள்ள இந்தியன் காபிஹவுஸ் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் புதுபிக்கும் பணியை உடனே துவங்க வேண்டும்.அதற்கு தேவையான நிதியை புதுச்சேரி அரசு வழங்க வேண்டும்.காபி ஹவுஸ் கிளைகளை நவீனப்படுத்தி புதிய கிளைகளை துவக்க ரூ.5 கோடி ஓதுக்க வேண்டும்.கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஜந்தாவது ஊதியக்கு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.



புதுச்சேரி மே 1
அகிலஇந்திய பிஎஸ்என்எல்-டிஒடீ ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுச்சேரி கிளை துவக்கும் விழா நடைபெற்றது.பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்த இப்புதிய கிளை துவக்க விழாவிற்கு கே.சிவக்குமார் தலைமை தாங்கினார்.ஏ.நாராயணசாமி வரவேற்புரையாற்றினார். பிஎ°என்எல் ஊழியர் சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் பி.அபிமன்யு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.மோகன் தாஸ்,மாநில செயலாளர் சி.கே.நரசிம்மன் ,புதுச்சேரி ஓய்வுதியர்கள் சங்கத்தின் தலைவர்கள் நடராஜன்,பாலமோகனன்,மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன்,செயலாளர் சங்கரன்,ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க செயலாளர் குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.ஓய்வூதியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மதியழகன்,பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
Read more...

மே தின paerane

0 comments
Read more...

May Day rally at Puducherry

0 comments

Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com