Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, May 5, 2011

CPI(M) DEMONSTRATION AT PUDUCHERRY AGAINST SRILANKAN GOVERNMENT FOR KILLING CIVILIAN TAMILIANS

0 comments

புதுச்சேரி மே 5
இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழர்களின் உயிரிழப்புகளுக்கும்,மனித உரிமை மீறல் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.உயிரிழப்பு ஏற்படுத்த காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். முள்வேளி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை மறு குடியமர்த்தபட வேண்டும்.தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி வழங்ககுவதற்கு இந்திய அரசு தனது ராஜ்ய உறவை பயண்படுத்த வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நேருவீதி-காந்திவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்ச்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் தலைமை தாங்கினார்.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன்,விருது நகர் மாவட்ட செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்கள்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமச்சந்திரன்,கலிவரதன்,முருகன்,உலகநாதன், மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.முன்னதாக இலங்கை ராஜபக்சே அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com