
புதுச்சேரி
புதுச்சேரி தபால் நிலையம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஆனந்து,மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரசெயலாளர் லெனின்துரை ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன் தர்ணாவை துவக்கி வைத்து பெசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,சிபிஜ தேசியக்குழு உறுப்பினர் விசுவநாதன் ஆகியோர் பேசினார்கள். இடது சாரிகட்சி தலைவர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சீனுவாசன்,பிரபுராஜ்,சலீம்,சேதுசெல்வம்,பூபதி,சரளா உள்ளிட்ட திரளானோர் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
மதகடிப்பட்டு
மதகடிப்பட்டு கடை தெருவில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார்.சிபிஜ திருபுவனை தொகுதி செயலாளர் டி.பி.ரவி முன்னிலை வகித்தார்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் கீதநாதன் ஆகியோர் பேசினார்கள்.இத்தர்ணாவில் திரளான இடது சாரிகட்சியினர் பங்கேற்றனர்.
பாகூர்
பாகூர் கடைத்தெருவில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.சிபிஜ பாகூர் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் அபிnஷ்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.தமிழ்ச்செல்வன்,ராஜா உள்ளிட்ட திரளான இடதுசாரிகட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
வில்லியனூர்
வில்லியனூர் தென்கோபுர வீதியில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஜ தொகுதி செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார்.சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் இராமமூர்த்தி,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஜி.ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.மணிபாலன்,அந்துவான் உள்ளிட்ட இரு கட்சிகளை சேர்ந்த திரளானோர் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி முழுவதும் நடந்த இத்தர்ணா போராட்டத்தில் ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நீதித்துறையின் உயர்மட்டத்தில் ஊழலை தடுக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும்.2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழலில் தொடர்புள்ள அமைச்சர்கள் அதிகாரிகளை தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.தேர்தல்களில் பணபலத்தை தடுக்க விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டும்.வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கியுள்ள கருப்பு பணத்தை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன கோரிக்கைகள் ஊழலுக்கு எதிரான இத்தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.