
புதுச்சேரி,ஜன-11
நில அபகரிப்பை எதிர்த்து போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துhத்துகுடி மாவட்ட செயலாளர் கே.கனகராஜ் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய ரவுடிகளை தமிழக அரசு கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துhத்துகுடி மாவட்டம் தெய்வசெயல்புரம் கிராம விவசாயிகளின் நிலங்களை திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.செல்வம் தனது பினாமிகளின் பெயரில் மோசடியான ஆவணம் தயாரித்து அவகரிக்க முயன்றதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியும்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இணைந்து போராடிவருகின்றனர்.இந்நிலையில் ஜன-6ல் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.கனகராஜ் வீட்டின் மீது நில அபகரிப்பு கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர்.நடந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைதுசெய்யகோரியும்.நில அவகரிப்பு கும்பல் மீது பாரபட்சமான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடந்த போராட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போரட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,ராமச்சந்திரன்,கலிவரதன் இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,சரவணன் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளான கட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.