
புதுச்சேரி,ஜன-13
புயல்நிவாரண நடவடிக்கைகளை துரிதபடுத்தக்கோரி விவாசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தானே புயலால் வீடிழந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர்,உணவு,மின்சாரம் உடணடியாக வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட நெல் ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் மும்,கரும்பு ஏககருக்கு ரூ.35ஆயிரமும்,வாழைக்கு ரூ.40ஆயிரமும்,தென்னை ஒன்றுக்கு ரூ.1500 ம் நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும்.சேதமடைந்த வீடுகயை கட்டி கொள்ள ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை உடன துவக்கவேண்டும்.தலித் மக்களுக்கு வீடுகட்டி கொள்ள ரூ.4லட்சம் மாண்யம் வழங்க வேண்டும்.100நாள் வேலை உறுதி திட்டத்தை உடனே துவக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
வில்லியனூர் வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பிரதேச தலைவர் எல்.கலிவரதன் தலைமை தாங்கினார்.செயலாளர் மணிபாலன் முன்னிலைவகித்தார்.சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.திருநாவுக்கரசு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் முருகையன்,வி.ச பிரதேச செயலாளர் எஸ்.பத்மநாபன்,கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வடிவேலு,தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஜி.ராமசாமி,மாதர் சங்க தலைவர் தெய்வானை,உள்ளிட்ட ஜய்ப்பன்,ரத்திணவேல் உட்பட திரளான விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.