புதுச்சேரி,ஜன-22,
இந்திராநகரில் தீ விபத்தால் எரிந்த வீடுகளுக்கு தலா ஐந்து லட்சம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்த சாமிப்பிள்ளை தோட்டம் இந்திராநகரில் த Pவிபத்தால் வீடுகளையும,; உடமைகளையும் இழந்த மக்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டிகொள்ள தலா 5லட்சம் வழங்க வேண்டும்.குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவனங்களை இழந்தவர்களுக்கு மாற்று ஆவணத்தையும்,உடமைகளையும் வழங்க வேண்டும்.தற்காலிக குளியல் அறை மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இ;;ப்போராட்;டம் நடைபெற்றது.
கருவடிகுப்பத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம்,பிரதேசகுழு உறுப்பினர் நடராஜன்,மாதர் சங்க பிரதேசதலைவர் தெய்வானை,செயலாளர் சத்தியா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.