புதுச்சேரி,ஜன-21
மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து ஜிப்மர் ஊழியர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஜிப்மர் தன்னாட்சி எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு தலைவர் தா.முருகன்,பொதுச்செயலாளர் பாலமோகனன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிருவனமாக மத்திய அரசு மாற்றுவதற்கு முயற்சி செய்த போது ஊழியர்களும்,பொதுமக்களும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அடங்கிய பொராட்டக்குழுவின் கோரிககைகள் முன்வைக்கபபட்டது.அதன்படி
ஜப்மர் ஊழியர்கள் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களாக நீடிப்பது,புதுச்சேரி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிக்கான இடஒதுக்கீடு,புதுச்சேரி வேலைவாய்பு அலுவலகம் மூலம் காலிபணிகளை நிரப்புவது,உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட திருத்தங்களின் ஒப்புதலோடு பாராளுமன்றத்தில் ஜிப்மர் மசோதா ஏற்றுகொள்ளப்பட்டது.
அதன்படி ஊழியர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து ஓயவ+தியம் அளிப்பது என்ற உறுதியை மத்திய சுகாதாரத்துறையும் ஏற்றுகொண்டது.அதன்படி தற்போது பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஓய்வ+தியம் வழங்கிவருவதைப்போல் ஜிப்மர்ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.அனால் ; ஓய்வ+தியம் வழங்குவதற்கான ஆணையில் மத்திய ஓய்வ+திய்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கமால் மறுத்துவருகிறது.இத்துறையின் அமைச்சராக புதுச்சேரியை சேர்ந்த வே.நாராயணசாமி பொறுப்புவகித்துவருகிறார் அவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவருவது கண்டனத்துகுறியது.இதேநிலை நீடிக்கும்மென்றால் புதுச்சேரியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தை ஊழியர்களைதிரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றனர்.