புதுச்சேரி,ஜன-7
அமைப்புசார தொழிலாளர்களின் நலச்சங்கமூலமாக புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய தொழிற்சங்கம் மையம் சிஜடியு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்த சிஜடியு புதுவை மாவட்ட செயலாளர் கே.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது,
புதுச்சேரி பகுதியை தானே புயல் மிகக் கொடுராமாக தாக்கியதன் விளைவாக புதுசேசரி நகரம் உட்பட அனைத்து பகுதிமக்களும் கடுமையாக பாதித்து ஸ்தம்பித்த நிலையில் அன்றாட உழைப்பின் மூலம் வருமானத்தை நம்பியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை இழந்தது மட்டுமின்றி தங்கள் வாழ்வாதாரங்களையும் இழந்து வாடி வருகின்றனர்.இந்த அசாதாரண சூழ்நிலையில் கட்டுமான நலவாரியம் மற்றும் அமைப்புசாரா நலச்சங்கம் மூலமாக முறைச்சாரா தொழிலாள்ரகளுக்கு புயல் நிவாரணம் உடனடியாக வழங்கிடு மாறு புதுச்சேரி அரசை சிஜடியு வலியுறுத்துகிறது.
மேலும் புயல் தீவிரம் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள் பாதிப்புகுள்ளாகியுள்ளன. சேதாராப்பட்டு உள்ளிட்ட அனைத்து தொழிற்பேட்டைகளும் மரங்கள் விழுந்தும் சாலை போக்குவரத்து மற்றும் மின்சாரம் இல்லாமலும் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன.இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். பாராம்பரியமிக்க எ.எப்.டி சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைகள் புயலின் தீவிரத்தால் முற்றிலும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டு முடங்கிப் போயுள்ளன.அரசின் தொழில்துறையும் ,தொழிலாளர்துறையும் விரைந்து செயல்பட்டு தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கவும் அனைத்து வகைபட்ட தொழிலாளர்களும் வருமான இழப்பின்றி பணியாற்றிட தேவைப்படும் நிவாரண உதவிகளை செய்திடுமாறும் சிஜடியு புதுச்சேரி அரசைக் கொட்டுகொள்கிறது.மேலும் மத்திய குழுவின் பார்வைக்கு பஞ்சாலைகள்,தொழிற்சமாலைகள் ,தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)