மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
தானே புயல் சேதத்தை மார்;க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கடந்த டிசம்பர் 31முதல ஐனவரி 5ஆம் தேதி வரை பார்வையிட்டு சேதாரமதிப்பீட்டுனையும்,கொடுக்க வேண்டிய நிவாரண தொகை குறித்து 6ஆம் தேதி மாநில முதல்வருக்கு விரிவான மனு ஒன்றை அளித்தோம்.மாநில அரசு கோரியுள்ள 2446 கோடியை மத்திய அரசு வழங்கவும்,சேதமதிப்பீட்டில் 50சதவீதத்தை உடனே மத்திய அரசு வழங்க மாநில அரசு வலியுறுத்தியது.தற்போது மாநில அரசு கோரிய தொகையில் மத்திய அரசு வெறும் 7சதவீதத்தை மட்டுமே வழங்கியிருப்பது எதிர்;கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில் மாற்றாந்தாய் மணப்பான்மையை காங்கிரஸ்கட்சியினால் ; காட்டபடுவது வெட்டவெளிச்சம்.
மேலும் முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் ஏற்றுகொள்ள தக்கதல்ல மார்க்சிஸ்ட் கட்சி கோரியபடி விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரமும்,தென்னை மரத்திற்கு 2ஆயிரமும்,வீடுகளுக்கு தலா 20ஆயிரமும்,முறைசார தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அரசு வழங்க வேண்டும்.மாநில அரசு புதுச்சேரியை பேரிடர் பகுதியாக அறிவத்துள்ள நிலையில் மத்திய அரசும் பேரிடர்பகுதியாக அறிவிக்க வேண்டும்.
மேலும் தானேபுயலால் பாதிக்கபட்டுள்ள புதுச்சேரியில் நகராட்சி நடப்பாண்டுக்கான வீட்டுவரி அறிவித்து இருப்பதும்,வரியை கட்டதவறினால் வீட்டை ஐப்திசெய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குறியது.எனவே புதுச்சேரி அரசு இந்தாண்டுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். பொருட்களுக்கான வாட்வரி,பேருந்து கட்டண உயர்வு கண்டனத்துகுறியது.எனவெ மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கோள்கைகளை கண்டித்து தானே புயலால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு உடணடியாக முழு நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தி ஐனவரி 21முதல்27வரை புதுச்சேரி பிரதேசம் முழுவதும் தெருமுனை பிரச்சாரமும்,பிப்ரவரி முதல் வாரத்தில் ஆர்பாட்டமும் கட்சியின் சார்பில் நடைபெறும்.
மேலும் புதுச்சேரியில் உள்ள ஐpப்மர்மருத்தவனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவனையாக அந்தஸ்த்து பெற்றாலும் தொடர்ந்து மத்திய அரசின் கட்டுபாட்டிலேயே இயங்கும் என பாரளுமன்றத்தில் உறுதி கூறப்பட்டது.
இந் நிலையில் தற்போது ஐப்மரில் உள்ள ஊழியர்களுக்கு பென்சன் திட்டம் பழையநிலையெ தொடராமல் உறுதி மொழிக்கு மாறாக மத்திய ஓய்ஊதிய துறை அமைச்சராக உள்ள வே.நாராயணசாமி பென்சன் திட்டத்தில் கைப்பம்மிட மறுத்துவருகிறார் இதே நிலை தொடருமே ஆனால் புதுவையில் உள்ள அவரது அலுவலகத்தை ஐpப்மர் ஊழியர்களொடு மார்க்சிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம் நடத்தும் என்றனர.இவ்வாறு கூறினார்கள்;.
1.புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட்கட்சியின் நகரகமிட்டி சார்பில் நெல்லிதோப்பு கடைவீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஐ;,கமிட்டி உறுப்பினர் சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.