புதுச்சேரி,பிப்-3
புதுச்சேரி ஜி தங்கும் விடுதியில் பாலியல் தொழிலில் இளம் பெண்ணை ஈடுபடுத்திய சம்பவத்தில் உண்மை குற்றவாலிகளை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜி தங்கும் விடுதியில் இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற
போது விடுதியின் ஜன்னலில் இருந்து கூச்சலிட்டதால் அப்பெண்ணை அருகில் இருந்து பெரியகடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் விடுதியின் உரிமையாளர் உட்பட 5பேர் மீது வழக்கு பதிவ செய்யப்பட்டது.மேலும் பாதிக்க பட்ட இளம் பெண் ரம்யா (17)மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு ரம்யா திடிரென்று
மாயமானார்.காவல்துறை கட்டுபாட்டில் இருந்த போது ரம்யா மாயமானது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியது.அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம்,வாலிபர் சங்கங்களின் போராட்டத்தாலும்,மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீட்டால் இவ்வழக்கை சிஐடி பிரிவுக்கு மாற்றபட்டது.
இந்நிலையில் இரண்டு மாதமாகியும் காணமல் போன ரம்யாவை கண்டுபிடிக்காததை கண்டித்தும்.இவ்வழக்கில் விடுதி
உரிமையாளர் உள்ளிட்ட உண்மை குற்றவாலிகளை காவல்துறை கைது செய்யாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாசாலை கோவிந்தசாலை சந்திப்பில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.உழவர் கரை நகர செயலாளர் லெனின்துரை முன்னிலை வகித்தார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு
உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சுமதி,மாதர்சங்க பிரதேச தலைவர் தெய்வானை,நிர்;வாகிகள் ஜெயலக்ஷ்மி உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.