புதுச்சேரி,பிப்-1
தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களக்கு நிவாரணம் வழங்க கோரி புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஆர்பு;பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்திற்கு புயல்பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசு ரூ.2500கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.புதுச்சேரி அரசு விவசாயிகளுக்கு அறிவித்த நிவராணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.விவசாய பயிர்களுக்கு ஒரு எக்டெருக்கு என்று அறிவித்துள்ள நிவாரணத்தொகையை ஒரு ஏக்கருக்கு என்று அறிவிக்க வேண்டும்.சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.விவசாயிகள் அரசு வங்கிகளில் வாங்கியுள்ள விவசாய நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.நூறுநாள்வேலை உறுதிதிட்டத்தை உடனே துவக்க வேண்டும்.புயல்பாதித்த பகுதியான காரைக்காலுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பிரதேச தலைவர்; நிலவழகன்,விவசாய தொழிலாளர் சங்க பிரதேச தலைவர் கலிவரதன் ஆகியயோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.இ;ப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,விவசாய சங்க செயலாளர் பத்மநாபன்,விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மணிபாலன் மற்றும் நிர்வாகிகள் சரவணன்,ராமமூர்த்தி,வடிவேல்,சிவப்பிரகாசம்,சேகர்,மாதர் சங்க பிரதேச தலைவர் தெய்வானை உள்ளிட்ட திரளாக விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கெற்றனர்.
முதல்வர் உறுதி
போராட்டத்தின் இறுதியில் முதல்வர் என்.ரங்கசாமியை சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம்,பிரதேச நிர்வாகிகள் நிலவழகன்,கலிவரதன்,பத்மநாபன்,மணிபாலன் ஆகியோர் கோரிக்கை மனுவை கோடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட முதல்வர் புயல் நிவாரணம்; பாதிக்க பட்ட விவசாயிகளுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது.அதேப்போல் காரைக்கால் விவசாயிகளுக்கும் புயல் நிவாரணம் வழங்கபடும் என்றார்.இதேப்போல் வேலான் அமைச்சர் சந்திரகாசு வை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
முன்னதாக விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் பழையபேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றமும் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.