Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, February 2, 2012

ஏனாம் காவல்நிலையத்தில் தொழிலாளி மரணத்தை கண்டித்து புதுச்சேரியில் இன்று நடைபெறும் பந்த் போராட்டத்தை விளக்கி தெருமுனைப்பிரச்சாரம்

0 comments

புதுச்சேரி,பிப்-1
தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களக்கு நிவாரணம் வழங்க கோரி புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஆர்பு;பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்திற்கு புயல்பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசு ரூ.2500கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.புதுச்சேரி அரசு விவசாயிகளுக்கு அறிவித்த நிவராணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.விவசாய பயிர்களுக்கு ஒரு எக்டெருக்கு என்று அறிவித்துள்ள நிவாரணத்தொகையை ஒரு ஏக்கருக்கு என்று அறிவிக்க வேண்டும்.சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.விவசாயிகள் அரசு வங்கிகளில் வாங்கியுள்ள விவசாய நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.நூறுநாள்வேலை உறுதிதிட்டத்தை உடனே துவக்க வேண்டும்.புயல்பாதித்த பகுதியான காரைக்காலுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பிரதேச தலைவர்; நிலவழகன்,விவசாய தொழிலாளர் சங்க பிரதேச தலைவர் கலிவரதன் ஆகியயோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.இ;ப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,விவசாய சங்க செயலாளர் பத்மநாபன்,விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மணிபாலன் மற்றும் நிர்வாகிகள் சரவணன்,ராமமூர்த்தி,வடிவேல்,சிவப்பிரகாசம்,சேகர்,மாதர் சங்க பிரதேச தலைவர் தெய்வானை உள்ளிட்ட திரளாக விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கெற்றனர்.
முதல்வர் உறுதி
போராட்டத்தின் இறுதியில் முதல்வர் என்.ரங்கசாமியை சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம்,பிரதேச நிர்வாகிகள் நிலவழகன்,கலிவரதன்,பத்மநாபன்,மணிபாலன் ஆகியோர் கோரிக்கை மனுவை கோடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட முதல்வர் புயல் நிவாரணம்; பாதிக்க பட்ட விவசாயிகளுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது.அதேப்போல் காரைக்கால் விவசாயிகளுக்கும் புயல் நிவாரணம் வழங்கபடும் என்றார்.இதேப்போல் வேலான் அமைச்சர் சந்திரகாசு வை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
முன்னதாக விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் பழையபேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றமும் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி,பிப்-1
ஏனாம் காவல்நிலையத்தில் தொழிலாளி மரணத்தை கண்டித்து புதுச்சேரியில் இன்று நடைபெறும் பந்த் போராட்டத்தை விளக்கி தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
ஏனாம் ரீஜென்சி செராமிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் மரணம் தொடர்பாக உயர்நீதி மன்ற நீதிபதி கொண்டு விசாரிக்க வேண்டும்.இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் வழங்க வேண்டும்.போலிஸாசாரின்; துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 9தொழிலாளர்களுக்கு தலா ரூ.10லட்சம் வழங்க வேண்டும்.தொழிற்சங்க உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப்-2) புதுச்சேரி மாநிலம் தழுவிய முழு பந்த் போராட்டத்திற்கு வியாபார காடைகள்,வர்த்தக நிறுவனங்கள்,பேருந்து,ஆட்டோ,டெம்போ, உரிமையாளர்கள்,பொதுமக்கள் ஆகியோரிடம் ஆதரவு கேட்டு வாகன தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
புழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய வாகன தெருமுனைப்பிரச்சாரத்திற்கு ஏஐடியுசி மாநில தலைவர் அபிஷேகம் தலைமை தாங்கினர்.சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன்,ஏடியு தலைவர் பாப்புசாமி,பிஎம்எஸ் தலைவர் ராமச்சந்திரன்,ஏஐடியுசிசி நிர்வாகி மோதிலால் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

ஆரசியல் கட்சிகள்
முதலியர் பேட்டையில் நடந்த தெருமுனைப்பிரச்சாரத்தில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.விசுவநாதன்,தேசியக்குழு உறுப்பினர்; நாரா.கலைநாதன்,மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,பார்வர்டு கட்சி தலைவர் முத்து,விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொருளாளர் இளவரசன்,ராஷ்டிர ஜனதாதளத் தலைவர் சஞ்சீவ்,பிஎஸ்பி தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பேசினார்கள்.
புதுச்சேரி பிரதேசத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ்,என்.ஆர்.காங்கிரஸ்,திமுக ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com