Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, February 3, 2012

பந்த் போராட்டம் - ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிசெய்ய கூடிய ரிஜென்சி செராமிக்ஸ் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சிஐடியு மாவட்ட செயலாளர்

0 comments






புதுச்சேரி,பிப்-2
ஏனாம் சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் வணிகர்கள் ஆதரவோடு பந்த் போராட்டம் அமைதியாக நடைபெற்றது.
ஏனாம் ரீஜென்சி செராமிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் மரணம் தொடர்பாக உயர்நீதி மன்ற நீதிபதி கொண்டு விசாரிக்க வேண்டும்.;.இறந்த தொழிலாளி முரளிமோகன் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் வழங்க வேண்டும்.இச் சம்பவத்தை தொடர்ந்து போலிஸாசாரின்; துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 9தொழிலாளர்களுக்கு தலா ரூ.10லட்சம் வழங்க வேண்டும்.தொழிற்சங்க உரிமை, தொழிலாளர்கள்
உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று(பிப்-2) சிஐடியு,ஏஐடியுசி,பிஎம்எஸ்,ஏஐசிசிடியு,டியுசிசி,யுடியுசி,உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அரைகூவலுக்கு இனங்க புதுச்சேரி மாநிலம் தழுவிய முழு பந்த் போராட்டம் வியாபார காடைகள்,வர்த்தக நிறுவனங்கள், பேருந்து,ஆட்டோ,டெம்போ உரிமையாளர்களின் ஆதரவோடு அமைதியாக நடைபெற்றது.
வர்த்தக சபையின் உத்தரவை மீறி
பந்த் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த வர்த்தக சபை தலைவர் சென்பகராஜன் கடைகள் திறந்திருக்கும் என்று அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுருந்தார். மேலும் வியாழனன்று காலை நேருவீதியில் மூடப்பட்டு இருந்த வணிக உரிமையாளர்களை வலுகட்டாயமாக கடைகளை திறக்க வலிறுத்தினர்.வர்த்தக சபை தலைவர்களின் வேண்டுகோலை மீறி வணிகர்கள் தங்களது கடைகளை திறக்க
மருத்தனர்.உடனே மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோரும் சம்பவஇடத்திற்கு வந்தனர்.இச்சம்பவத்தால் சிறிது நேரம் நேருவீதியில் பரபரப்பு காணப்பட்டது.புதுச்சேரி நகர பகுதியான நேருவீதி,அண்ணாசாலை,பெரியஆங்காடி, காந்தி வீதி,பாரதி வீதி,சின்னகடை,மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் கிராபுரங்களான
முத்தியாள்பேட்டை,நெல்லிதோப்பு,அரியாங்குப்பம்,வில்லியனூர்,லாஸ்பேட்டை,பாகூர்,மதகடிப்பட்டு,திருக்கனூர், ஆகிய பகுதிகளில் உள்ள வணிக கடைகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.
பேருந்துகள்; ஓடவில்லை
புதுச்சேரியில் பெரும்பாளான வழிதடங்களில் தனியார் பேருந்துகளே இயக்கபடுகிறது.இப்போராட்டத்திற்கு தனியார்பேருந்து உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தால் அரசு பேருந்தான பிஆர்டிசி பேருந்துகளை மட்டுமே போலீஸ் பாதுகாப்போடு பயணிகள் கூட்டம் இல்லாமல் இயக்கபட்டது.அரசு பள்ளிகள் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டது.தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டது.இதேப்போல் காரைக்காலிலும்,மாகே,ஏனாம் ஆகிய பகுதிகளுலும் பந்த் போராட்டம் நடைபெற்றது.இப்Nபுhராட்டத்திற்கு முதலில் ஆதரவு அளித்திருந்த ஐஎன்டியுசி,தொமுச,ஏடியு பின்னர் முழு அடைப்பிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆதரவளித்தவர்களுக்கு சிஐடியு நன்றி
ஏனாம் சம்பவத்தை கண்டித்தும் சிஐடியு,ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு புதுச்சேரிமுதல்வர்,வர்த்தக சபை ஆகியோரின் வேண்டுகோலை மீறி ஆதரவு அளித்து தங்களது எதிரப்;புகளை பதிவு செய்துள்ள வர்தக நிறுவனங்களுக்கும்,பேருந்து,ஆட்டோ,உரிமையாளர்களுக்கும்,அனைத்து தொழிலாளர்களுக்கும்,மார்க்சிஸ்ட்,இந்திய
கம்யுனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,பிஜேபி,பார்வர்டு பிளாக்,மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கும் சிஜடியு மாவட்டக்குழு சார்பில் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது.புதுச்சேரி அரசு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு ஏனாம் பகுதி நிர்வாகத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியை பணியில் அமர்த்த வேண்டும்.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிசெய்ய
கூடிய ரிஜென்சி செராமிக்ஸ் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com