புதுச்சேரி,பிப்-7
புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங்; நீக்ககோரி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சி தாக்கல் செய்த மனு மீது நான்குவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
;.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
புதுச்சேரி துனணநிலை ஆளுநர் இக்பால்சிங் தனது மகன்கள் இடம்பெற்றிருந்த சவுத் டிரஸ்ட என்ற அறக்கட்டளைக்கு காரைக்காலில் மருத்துவகல்லூரி துவங்க தடையில்லா சான்று வழங்கினார்.புதுச்சேரி அமைச்சரவைக்கு தெரியாமல் தனது அதிகாரத்தை தவறாக பயண்படுத்திய ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம்.மேலும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.
.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மார்க்சிஸ்ட் கட்சிகூறிய குற்;;;;றசாட்டின் ஆதரங்களை எடுத்து கொண்டது.மேலும் ஆளுநர் மீது மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தயது.மேலும் மனுதாரர் மேல்நடவடிக்கைக்கு செல்ல கோர்ட் தடையாக இருக்காது என்று கூறி இருந்தனர்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தோம்.அதன்படி பிப்ரவரி 3ஆம்தேதி மனுவை ஏற்றுகொண்ட நீதிபதிகள் ஆளுநர் இக்பால்சிங் மீதான புகார் குறித்து புதுச்சேரி அரசம்,மத்திய உள்துறை அமைச்சகமும் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்;க வேண்டும்; என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்பபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது என்றனர்.
மேலும் புதுச்சேரி பிரதேசம் மாபியா கும்பல் நிரைந்த நகரமாக மாறியுள்ளது.2006ஆம் ஆண்டு முதல் 2011வரை காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளது.தற்போது என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியிலும் குற்றங்கள் அதிகரித்துள்ளது.இதனாலே சமிபநாட்களாக வர்த்தகர்களை சமுக விரேத காரியத்தில் ஈடுபடுபவர்கள் மிரட்டுவதும்,தாக்குவதும் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துவருகிறது.
காவல்துறையின் தவறான அனுகுமுறையும்,ஆட்சியாளர்களின் கொள்கைகளுமே இதற்கு காரணமாகும்.
மேலும் ஜி தங்கும் விடுதியில் பெண் பாலியலுக்கு உட்படுத்தபட்ட சம்பவத்தில் அப்பெண் காவல்துறை கட்டுபாட்டிலிருந்து காணாமல் போன சம்பவம் தொடர்பாக மாநில முதல்வர் தலையிட வேண்டும்.ஏனாமில் நடந்த ரிஜென்சி செராமிக்ஸ் நிறுவன பிரச்சனை 92ஆம்ஆண்டிலிருந்தே நிலவிவந்துள்ளது.தற்போது மாவட்ட அளவிளான விசாரனை உண்மை மூடிமறைக்கும் வேலை எனவே உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் உத்தரவிட வேண்டும.சிபிஎம் தமிழக சட்டமன்ற குழு தலைவர் அ.சவுந்தரராசன் பிப்பரவரி 10ஆம்தேதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.மேலும் ஏனாம் பிரச்சனை தொடர்பாக சிஐடியு சார்பில் தமிழக மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டமும் அன்றைய தினத்தில் நடைபெறுகிறது.மேலும் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணத்ததை வழங்க கோரி பிப்ரவரி 9ஆம்தேதி தலைமை தபால்நிலையம் எதிரில் கண்டன ஆர்பாட்டமும் கட்சியின் பிரதேசக்குழு சார்பில் மத்திய,மாநில அரசுகளை வலிறுத்தி நடைபெறுகிறது என்றனர்.
இவ்வாறு கூறினார்கள்.செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உடன் இருந்தார்.