புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் கலைவிழா பாகூரில் 28.04.2012 சனி அன்று மாலை நடைபெற்றது . கலைவிழாவில் சிறப்புரை - தப்பாட்டம் ஒயிலாட்டம், நாடகம், கவிச்சரம், நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழக பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆறினார் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கலந்துகொண்டார் . DYFI பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் வரவேர்புரை,புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி தலைவர் தலித் சுப்பையா, பொதுச் செயலாளர் கோ.ராமசாமி, நிர்வாகிகள் நிலவழகன், லெயோன்,கலிவரதன்,C H பலமோகணன், என்.கொளஞ்சியப்பன்,மூர்த்தி Ex MLA கலந்துகொண்டனர். கடலூர் நெய்தல் குழுவின் நாட்டுப்புறக் கலைநிகழ்வுகள் நடைபெற்றது. புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழு, விடுதலைக்குரல் இசைக்குழுவினரின் இன்னிசை நடைபெற்றது.
Sunday, May 6, 2012
Subscribe to:
Post Comments (Atom)