புதுச்சேரி,மே-16
ஆசிரியர் தகுதி தேர்வை உடனே தள்ளி வைக்க வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆசிரியர் தகுதி தேர்வை உடனே தள்ளி வைக்க வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009ல் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் நியமனம் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மார் 25ஆம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முன்னறிவிப்பு செய்து ஏப்ரல் 12ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஜூன் 3ஆம் தேதி தகுதித் தேர்வு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. பட்டயப் பயிற்சி ஆசிரியர்கள் தகுதித்தேர்வுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசின் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிட்டு 1½ மாதம் கழித்து தகுதி தேர்வு நடைபெற 20 தினங்களே உள்ள நிலையில் புதுச்சேரி அரசு தமிழகத்தில் நடைபெறும் தகுதித்தேர்வில் புதுச்சேரி பட்டய பயிற்சி ஆசிரியர் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் இந்த அவசர நடவடிக்கை அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் உரிமையை மறுப்பதுடன், புதுச்சேரி பட்டயப் பயிற்சி ஆசிரியர்களின் நலனுக்கு எதிரானதாகும்.
பட்டய பயிற்சி ஆசிரியர்களில் பலர் உயர்கல்வியில் சேர்ந்து கல்வி இறுதியாண்டு தேர்வு எழுத உள்ளனர். அதற்கான பல்கலைக்கழகத் தேர்வும் நடந்து வருகிற காலமாகும். மேலும் விண்ணப்பம் பெறுவதற்கும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திருப்பி அளிப்பதற்கும் 5 தினங்கள் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 28.08.2010க்க்குப் பின்னர் ஆசிரியர் படிப்பு முடித்த அனைவரும் தகுதித்தேர்வில் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பு குழப்பமாகவே உள்ளது. 28.08.2010க்கு முன்பு ஆசிரியர் படிப்பு முடித்தவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆகவே, மாநில முதல்வர் அவர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையிலும், புதுச்சேரியில் தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திடும் வகையிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தகுதித்தேர்வை ரத்து செய்து உதவிட வேண்டுகிறோம். மேலும் தகுதித் தேர்வில் தகுதிப்பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்குவதை உறுதிப்படுத்தவும், காலியுள்ள ஆசிரியர் பணியிடத்தை முழுமையாக நிரப்பவும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உறுதிப்படுத்திடவும், மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகிறது. இக்கோரிக்கையின் மீது புதுச்சேரி இளைஞர்களும் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.