புதுச்சேரி,மே-18
பால் உற்பத்தியை பெருக்க உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி பிரதேச பால் உற்பத்தியாளர்கள் சங்க அமைப்பு கூட்டம் கரிகலாம்பாக்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதேச பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார். தலைவர் நிலவழகன்,செயலாளர் எ°.பத்மநாபன்,நிர்வாகி முருகையன் உள்ளிட்ட திரளான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தில் தமிழக பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் கே.முகமதுஅலி கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசியது வருமாறு,
கடந்த ஆண்டு பால் உற்பத்தியாளர்கள் 8நாள் தொடர் போராட்டம் நடத்தியதால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியது.இன்றைக்கு நாள் ஒன்றுக்கு 1கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.விவசாயத்திற்கு அடுத்தது இத்தொழிலில் 15லட்சம் குடும்பங்கள் ஈடுப்பட்டுள்ளனர்.எனவே பால் உற்பத்தியாளர்கள் நட்டமில்லமால் இத்தொழிலை நடத்த, கால்நடை தீவனங்களுக்கு அரசு 50சதவீதம் மாண்யம் அளிப்பதோடு,லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 ஊக்கதொகை அளிக்கவேண்டும்.அதேப்போல் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் ,மருந்துகளும் கிராமங்களில் இருக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது இவ்வாறு முகமது அலி பேசினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்த அமைப்பு குழு கூட்டத்தில் சங்கத்தின் புதுசசேரி பிரதேசத்தின் கன்வீனராக ஜி.ராமசாமியும், முத்து பொருளாளராகவும்,ராஜாங்கம்,கிருஷ்ணன்,தனிகா,ஜீவா,முருகையன்,ஜயப்பன்,சங்கர்,முத்து உள்ளிட்ட 11பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் ஜூன் முதல் வாரத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை அடங்கிய மனுவை புதுச்சேரி அரசிடம் கொடுப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.