Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, May 19, 2012

மூடியுள்ள ரோடியார் பஞ்சாலையை உடனே திறக்க வேண்டும்

0 comments
புதுச்சேரி,மே-15
மூடியுள்ள ரோடியார் பஞ்சாலையை உடனே திறக்க வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு,புதுச்சேரி மாநிலத்தின் பழமையும் தொழிலாளர் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழ்கிற ரோடியார் பஞ்சாலை தானே புயலுக்குபிறகு மூடியே வைக்கப்பட்டுள்ளது.முந்தைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால் பஞ்சாலைகள் அழிவின் விளிம்பில் உள்ளது.2009 நாடாளுமன்ற தேர்தலின் போது மத்திய அரசின் நிதி உதவி பெற்று ரோடியார்,சுதேசி,பாரதி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலைவாய்ப்புகளை அளிப்பேன் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.2011 சட்டப்பேரவை  தேர்தலில் என்.ரங்கசாமி அவர்கள் பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும்,அரசு திட்டங்களுக்கு தேவையான துனிகளை கொள்முதல் செய்து பஞ்சாலைகள் பாதுக்காக்கப்படும் என அறிவித்தார். காங்கிர° கட்சின் மத்திய அமைச்சர் நாராயணசாமியும்,என்.ஆர் காங்கிர° கட்சியின் முதல்வர் ரங்கசாமியும் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.பெயரில் மாற்றமே தவிர கொள்கை மற்றும் செயல்பாட்டில் ஒரே தன்மை கெண்டவையாகத்தான் உள்ளன.
பஞ்சாலையை திறப்பதற்கு மாறாக வாரியத் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது எதிர்மறையான அணுகுமுறையாகும்.ஆகவே மாநில அரசு மூடியுள்ள ரோடியார் பஞ்சாலையை உடனடியாக திறந்து இயக்கிட வேண்டும் ரோடியார் பஞ்சாலையை முழுமையாக இயக்கவும், மில்லை நவீனப்படுத்திட திட்டம் உருவாக்கி மத்திய ஜவுளி மேம்பாட்டு நிதியிலிருந்து உரிய நிதி உதவி பெற்றிடவும் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என மார்க்சி°ட் கட்சி வலியுறுத்துகிறது.மேலும் மில்லை முழுமையாக இயக்குவதற்கு அனைத்த தொழிற்சங்க அமைப்புகளும்,ஜனநாயக இயக்கங்களும் இணைந்து போராட முன்வர வேண்டும்.
அதேப்போல் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கபடவில்லை.எனவே  பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும்.மேலும் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு வீடுகள் பாதிப்பு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது.பயனாளிகள் எண்ணிக்கை விவரம் உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை வெளியிடவும் மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயற்குழு புதுச்சேரி அரiசை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com