புதுச்சேரி,மே-31
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் புதுச்சேரியில் 450பேர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிர° தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50பைசா உயர்த்தியதை கண்டித்தும்.விலை உயர்வை உடனே திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சி°ட் கட்சி,இந்திய கம்யூனி°ட் கட்சி,பார்வர்டு பிளாக் உள்ளிட்ட இடது சாரிகட்சிகள் சார்பில் நாடு தழுவிய மாறியல் போராட்டத்திற்கு வியாழனன்று( மே-31) ல்அழைப்பு விடுக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி அண்ணாசாலை அருகில் இருந்து துவங்கிய மறியல் போராட்டத்திற்கு சிபிஐ மாநில செயலாளர் விசுவநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முத்து ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் செற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,ராமசாமி,கே.முருகன்,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,லெனின்துரை,பிரபுராஜ்,சிபிஐ மாநில நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சலீம்,கீதநாதன் ,அபிஷேகம்,முருகன்,சரளா,உள்ளிட்ட இடதுசாரிகட்சிகளின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலையிலிருந்து ஊர்வளமாக வந்து காமராஜர் சிலை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40பெண்கள் உட்பட 320பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதேப்போல் பாகூர் தபால் நிலையம் எதிரில் நடந்த மறியலுக்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உள்ளிட்ட 60பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.மதகடிப்பட்டில் நடந்த மறியலுக்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன் தலைமை தாங்கினார்.கொம்யூன்செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,அன்புமணி,ஆவணியப்பன்,சங்கர்,உள்ளிட்ட 70 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு
இப்போராட்டத்தை யொட்டி புதுச்சேரி நேருவீதி,காந்தி வீதி, அண்ணாசாலை,சின்னகடை,முத்தியாள்பேட்டை,நெல்லித்தோப்பு,முதலிhயர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.புதுச்சேரியில் பெரும்பாளான இடங்களில் சாலைகளில் மக்கள் கூட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது .
ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
சிஐடியு,ஏஐடியுசி,தொமுச,புதுச்சேரி மாநில ஆட்டோ சங்கம் உள்ளிட்ட ஆட்டோ சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றதால் புதுச்சேரியில் 80சதவீத ஆட்டோக்கள் இயங்வில்லை.காமராஜர் சிலை எதிரே சிஐடியு ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கத்தின் பிரதேச பொதுச்செயலாளர் சீனுவாசன்,ஏஐடியுசி ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்கள்.