புதுச்சேரி,ஜூன்-26
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமான பணிகளில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.பல்கலைகழகத்தால் 100மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத் உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும்.பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியை கண்டறிந்த ஊழியர் ஜெயராமன் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு இன்னும் குற்றவாலிகளை கண்டுபிடிக்க படவில்லை.எனவே உடணடியாக குற்றவாலிகளை கண்டுபிடிக்கவேண்டும்.பல்கலைகழகத்துக்கு நிலம் ஒதுக்கிய விவசாயிகளின் குடும்பத்தாருக்கு வேலை வழங்க வேண்டும்.புதிய துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சின்ன காலாப்பட்டில் உள்ள பல்கலைகழக வாயில் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி°ட் கட்சியின் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ்,டிஒய்எப்ஜ பிரதேச செயாளர் ப.சரவணன்,பொருளாளர் ஆர்.சரவணன்,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து மற்றும் பல்கலைகழக மாணவர்கள் இப்போராட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.