Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, April 28, 2013

தமிழ் சமூகத்தை பின்னோக்கி மாற்றும் வேலையை இராமதாஸ் செய்து வருகிறார் என்று சாமூவேல்ராஜ் குற்றஞ்சாட்டினார்.

0 comments

புதுச்சேரி,ஏப்-28
தமிழ் சமூகத்தை பின்னோக்கி மாற்றும் வேலையை   இராமதாஸ் செய்து வருகிறார் என்று சாமூவேல்ராஜ் குற்றஞ்சாட்டினார்.


தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்கரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரி திருபுவனை கடைத்தெருவில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி துணை தலைவர் எல்.கலிவரதன் தலைமை தாங்கினார்.பிரதேச தலைவர் தலித்சுப்பையா முன்னிலை வகித்தார்.பொதுச்செயலாளர் இராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,ஜனநாயக நாட்டில் சாதி ஒழிய வேண்டும் என்று அம்பேத்காரும்,தந்தை பெரியாரும் போராடினார்கள்.நாட்டு மக்களில் 25சதவிதத்தின் தலித் மக்கள் உள்ளனர்.


ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களை சாதி வாரியாக பிரித்து பார்க்கும் வேலையை பாமக நிறுவனர் ராமதாஸ் முயன்று வருவது கண்டனத்துகுறியது.மது விளக்கை பற்றி பேசும் இராமதாஸ்  கட்சி சேர்ந்தவர்கள் மாமல்லபுரம் போவதற்காக திருவண்ணாமலை,விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் ஏன் புதுச்சேரி வழியாக அனிவகுத்து செல்ல வேண்டும்.சித்திரை பவூனர்மி விழாவிற்கு போனவர்கள் கைகளில் மது பாட்டில்களோடு சென்றார்களே இவர்கள்  தான் தமிழகத்தில் மது விளக்கை அமல்படுத்த  வேண்டும் என்று கூறுவது  யாரை ஏமாற்ற?
அம்பேத்காரின் பார்வையில் இரண்டு விதமான இந்திய மக்கள் இருந்தனர்.


வடக்கே வாழும்  மக்களை பிற்போக்குதனமாக உள்ளார்களே,தெற்கு இருப்பவர்கள் முற்போக்கு கருத்துகளை தாங்கியவர்கள் என்ற இரண்டு கோனங்களில் பார்த்தார்.தனது பெயருக்கு பிறகு ஜாதிபெயரை அடையாளம் காட்டி கொள்பவர்கள் வடக்கேவும்,தெற்கு அத்தகைய நிலை இல்லை என்பதை அம்பேத்கார் கண்டார். பெரியார் போன்ற முற்போக்கு தலைவர்கள் இங்கே வாழ்ந்து வந்ததால், அத்தகைய  தெற்கில் வாழும் தமிழ் மக்களை பிற்போக்கு தனமான கருத்துகளை கூறி தமிழ்சமூகத்தையே  பின்னோக்கி மாற்றும் வேலையை இராமதாஸ் போன்றவர்கள் செய்து வருவதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்றார்.


இன்றைக்கு மரக்காணத்தில் தலித் மக்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டு,உடமைகள் அனைத்தும்  தீக்கீரையாக்கப்பட்டுள்ளது  கண்டனத்துகுறியது.இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  
இவ்விழாவில் முன்னணியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் நீதிராஜன்,சிபிஎம் பிரதேச செயலளார் வெ.பெருமாள்,புதுச்சேரி நிர்வாகிகள் பூ.மூர்த்தி ,எம்.தவமணி,தெய்வநீதி,நிலவழகன்,கொளஞ்சியப்பன் உள்ளிட்ட திராளனோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக கும்கி திரைப்பட புகழ் புத்தர் கலைக்குழுவின் பறையாட்டம்,ஒயிலட்டம்,பெரியகுச்சியாட்டம்,மான்கொம்பாட்டம் மற்றும் புதுச்சேரி சப்தர்ஹஷ்மி கலைக்குழுவின்  இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com