புதுச்சேரி,ஜுன்-11
தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் இருந்த அமல்படுத்த வேண்டும்.தனியார் பள்ளி,கல்லூரிகளின் கட்டாய நன்கொடை,கல்வி கட்டணங்களை முறைபடுத்த சட்டம் இயற்ற வேண்டும்.சென்டாக் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நடப்பு கல்வியாண்டின் துவக்கித்திலேயே வழங்க வேண்டும்.ஏற்கனவே வழங்கபட வேண்டிய மாணவர்களுக்கும் பாக்கித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.தனியார் பொறியியற்,மருத்துவக்கல்லூரிகளில் அரசின் 50சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கல்வித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராமசாமி,சுமதி,இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,தமிழ்ச்செல்வன்,சரவணன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் ,திரளான பொதுமக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்