Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, June 28, 2013

சட்டமன்றம் உள்ள போது சட்டம் இயற்ற உரிமையில்லை

0 comments


புதுச்சேரி,ஜுன்-24
சட்டமன்றம் உள்ள போது சட்டம் இயற்ற உரிமையில்லை என்ற ஜனநாயக பற்றாக்குறையை மார்க்சிஸ்ட்  கட்சி ஏற்றுகொள்ளாது என்று சிபிஎம்  தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் பேசினார்.

இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசக்திற்கு மாநில அந்தஸ்து கோரி கருத்தரங்கம் வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்கு புதுச்சேரி தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார்.அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத்தலைவர் சி.எச்.பாலமோகனன் அணைவரையும் வரவேற்று பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
புதுச்சேரி மாநில வருவாய் 60சதவீதத்திற்கும் மேல் உள்ள போது மாநில அந்தஸ்து என்பது தொடர்ந்து மறுக்கபடுகிறது.மாநில அந்தஸ்து பெருவதற்கான போராட்டத்தில் மற்ற மாநிலத்தவர்களையும் இணைத்து போராட வேண்டும் என்றார்.அத்தகைய போராட்டத்தை  மார்க்சிஸ்ட் கட்சி  முன்னெடுத்து செல்லும்.

புதுச்சேரி மாநிலத்தில் விவசாய உற்பத்தி  என்பது குறைந்துள்ளது.விவசாய நிலங்கள் வணிகமயமாக்கப்பட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு மேற்கு வங்கத்தில் நிலபயண்பாடுகுறித்து சட்டம் இயற்றி பாதுகாத்தது.அதில் தொழில்வளர்ச்சிக்கு நிலபயண்பாடு வரும்போது முன்னூரிமை அளிப்பது என்ற திட்டம்   வகுக்கப்பட்டது.அத்தகைய நிலையில் சட்டமன்றம் உரிமையை பெற்றுள்ள புதுச்சேரியில் சட்டம் இயற்ற உரிமையில்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சி அத்தகைய ஜனநாயக பற்றாக்குறையை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்று கொள்ளாது.எவேதான் கட்சியின் தமிழ்மாநிலக்குழு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது என்றார்.மாநில அந்தஸ்து கோரிக்கையை அணைத்து கட்சியின் கோரிக்கையாக கொண்டு செல்ல வேண்டும்.

புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்திய 1991 ஆம் ஆண்டில் இருந்து 2012 வரை மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகையாக மத்திய அரசு 21லட்சம் வழங்கியுள்ளது.ஆனால் மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி அரசு பெற்ற 4671 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய காங்கிரஸ் அரசு தயங்குகிறது என்றால் யார் நலன்களுக்கு ஆட்சி செய்யபடுகிறது என்ற கேள்வி எழுகிறது.மத்திய அரசு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கும் போது அரசியலை வைத்து நிதி ஒதுக்கீடு செய்படுகிறது என்றார்.

என்.குணசேகரன்
சமூக ஆய்வாளரும் சிபிஎம் தமழ்மாநில செயற்குழு உறுப்பினருமான என்.குணசேகரன் பேசுகையில், மத்தியில் ஆட்சி செய்பர்களின் கையிலேயே அணைத்து அதிகாரங்களும் இருக்கவேண்டும் என்பது கூட்டாட்சிக்கு விரோதமான செயல்.விடுதலை அடைந்து மொழிவாழி மாநிலங்கள் அமைக்கபட்டதற்கு காரணமானவர்கள் கம்யூனிஸ்டுகள்.எனவே தான்  மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் மேற்குவங்க முன்னால் முதல்வர் ஜோதிபாசு தலைமையில் மாநில முதல்வர்கள் கூட்டம் என்பது அப்போது நடைபெற்றது.தற்போது ஒரிசா,தமிழகம்,பீகார் போன்ற மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களுக்கு நிதி ஓதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறும் நிலையை பார்க்கிறோம்.எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெரும் போராட்டத்தில் மக்களை திரட்டி போராட வேண்டும் என்றார்.

பேராசிரியர் மு.இராமதாசு,

புதுச்சேரி  பல்கலைகழக இயக்குநரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான போராசிரியர் மு.இராமதாசு பேசுகையில்,
2005ஆண்டு புதுச்சேரிக்கு வந்த பாராளுமன்ற நிலைக்குழு புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என்று பரிந்துறைத்தது.மேலும் இன்னும் 5அல்லது 10ஆண்டுகளில் மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நிலைகுழு சிபாரிசு செய்தது.யூனியன் பிரதேச அந்தஸ்துபடி புதுச்சேரிக்கு கடந்த காலங்களில் 90சதவீத நிதி என்பது மாணியமாக வழங்கப்பட்டது.அப்போதே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.தற்போது 90சதவீத மாணியம் என்பது குறைக்கப்பட்டு 30சதவீதம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.சட்டமன்றம் இருந்தும் சட்டம் இயற்றுவதற்கோ அல்லது நமக்கான திட்டங்களை நாமே நிறைவேற்றி கொள்ள அதிகாரம் இல்லாதாது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக உள்ளது என்றார்.எனவே மாநில அந்தஸ்து பெருவது காலத்தின் கட்டாயம் என்றார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் என்.கொளஞ்சியப்பன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com