Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, June 28, 2013

எல்எல்சி நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் முன்னிற்கும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் கூறினார்.

0 comments
புதுச்சேரி,ஜுன்-23
எல்எல்சி நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் முன்னிற்கும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் கூறினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமக்கிருஷ்ணன் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,நெய்வேலி நிறுவனத்தின் 5சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதை ஒரு போதும் ஏற்று கொள்ளமுடியாது.மத்திய அரசு கடந்த காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகையாக ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி வரிசலுகையாக வழங்கியுள்ளது.

ஆனால் இன்றைக்கு எல்எல்சி நிறுவனத்தின் 5சதவீத பங்குகளை விற்பதின் மூலம் ரூ.440 கோடி ஈட்டபடும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.பல ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கும் நிறுவனத்தின் பொதுத்துறை பங்குகளை தனியார் நிறுவனங்கள் வாங்கினால் அதன் ஷேர் மதிப்பு கூடும் போது பொதுத்துறை நிறுவனத்தையே வாங்கும் நிலை ஏற்படும்.பங்கு விற்பனையை நியாயப்படுத்தி கூறும் அமைச்சர் நாராயணசாமி கூற்றை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்று கொள்ளமுடியாது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நிலையை மத்திய அரசு எடுத்தபோது பலதரப்பட்டவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.தற்போது எல்எல்சி தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்தகைய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் துணைநிற்கும்.

உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் பொதுவினியோக திட்டத்தை சீர்குலைக்கும் திட்டம்.அணைவருக்கும் உணவை உத்தரவாதபடுத்தும் சட்டம் கொண்டு வரும் வேலையில் நேரடி பணப்பட்டுவாட திட்டம் என்பது எழை எளிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே புதுச்சேரி அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.அதேப்போல் மின்சாரகட்டணத்தை புதுச்சேரி அரசு உயர்த்தியிருப்பதை புதுச்சேரி அரசு திரும்ப பெற வேண்டும்.


கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இராமக்கிருஷ்ணன் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி கழிநீர்  அடைப்பை  சரிசெய்வதற்கு இயந்திரங்களை கொண்டு தான் சரிசெய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்,புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியயோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com