புதுச்சேரி,மே-30
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு,
புதுச்சேரி மாநிலத்தில் வெளிப்படையான நிர்வாகம் விரைவானசேவை ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கத்திற்காக மக்கள் தொடர்புடைய முக்கியத்துறையில் மக்களின் குறைகேட்பு திறந்த வெளி விவாதக் கூட்டங்களை நடத்திட அரசாணை என்.1 தேதி 15.6.2011 வெளியிடப்பட்டது.மேற்படி அரசாணையில் பட்டியலிடப்பட்ட முக்கிய துறைகள் மற்றும் தேவை அல்லது பொதுமக்களிடம் இருந்து வரும் கோரிக்கை அடிப்படையில் பட்டியலிடப்படாத மக்கள் தொடர்புடைய துறைகளில் மாதந்திர குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.ஆனால் அரசாணைப்படி மாதந்திரக் கூட்டங்களில் ஒரு சிலத்துறைகளில் நடந்தது ஆனால் தொடர்ந்து நடைபெறவில்லை.சிலத்துறைகளில் செயலாளர்கள் கூட கலந்து கொள்ளாத நிலைமை இருந்தது.
இந்நிலையில் 5.12.2012ல் தலைமைச் செயலாளர் தலைமையில் அரசு துறை செயலாளர்களால் மற்றும் சிறப்பு செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முந்தைய அரசாணையை மறுபரிசீலனை செய்யபட்டு புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் மாற்றங்கள் உள்ளடக்கிய 31.12.2012 என்ற ஆணை என்.3 நிர்வாக சீர்திருத்த பிரிவால் வெளியிடப்பட்டது.மேற்படி வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளும்,மாதந்திர குறைகேட்பு கூட்டத்தை 6மாதத்திற்கு ஒரு முறை மாற்றியது என்பதும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்க உதவாது.மக்கள் சேவைகள் தாமதப்படவுமே வழிவகை செய்யும்.ஆகவே நிர்வாக சீர்திருத்ததுறையின் ஆணையை மறுபரிசீலனை செய்வதோடு குறைந்தபட்சம் 3மாத்திற்கு ஒரு முறை மக்கள் குறைகேட்பு கூட்டத்தை துறைவாரியாக நடத்திட வேண்டும்.மேலும் மக்கள் கூறைகேட்பு கூட்டத்தை நடத்தாத பட்சத்தில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கத்தை அரசுத்துறைகளில் முன்பு நடத்தவும் கட்சி தீர்மானித்துள்ளது.இவ்வாறு தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பெருமாள் கூறியுள்ளார்.
அரசுதுறைகளில் ஊழல் முறைகேடுகளை கட்டுபடுத்த மாதந்திர குறைகேட்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.