Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, November 9, 2010

ஐந்து இடதுசாரி கட்சிகளின் சார்பில புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி நவ 8
இந்திய ஆசிய விவகாரங்களில் அமெரிக்க தலையீட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஐந்து இடதுசாரி கட்சிகளின் சார்பில புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்திய தொழில்துறையை கபலிகரம் செய்;ய வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவை கண்டித்தும், போபால் வி~வாயு விபத்தின் குற்றவாளி ஆன்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திய- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும். ஈராக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐம்பதாயிரம் படையினரையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும.; என்பன கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணை செயலாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நாரா கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட்(எம்.எல்) கட்சியின் மாநில பொதுசெயலாளர் சோ.பாலசுப்ரமணியன், பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்து, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
இப்போராட்டத்தில் ஐந்து இடதுசாரிகட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com