அமைப்புசார தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கதொகை ரூ.2ஆயிரம் வழங்க கோரி புதுச்சேரி சட்டமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டோ,கட்டுமாணம்,சுமைப்பணி,வீட்டுவேலைசெய்யும் பெண்தொழிலாளர்கள் உள்ளிட்ட அiப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கதொகை ரூ.2ஆயிரம் வழங்கவேண்டும்.நலச்சங்த்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.வீட்டுவேலை செய்யும் பெண்களை அமைப்பு சார நலச்சங்கத்தில் உறுப்பினராக்க வேண்டும்.படிவம் வழங்கிய அணைவரையும் கட்டுமான நலவாரியம்,அமைப்பு சாரா நலச்சங்கத்தில் உறுப்பினராக்க சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சிவக்குமார்,கலியன்,சுமதி,ராமசாமி,மது,மதிவாணன்,உள்ளிட் திரளான முறைசார தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக பழைய பேரூந்து நிலையம் எதிரிலிந்து ஊர்வளமாக சென்று சட்டமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைச்சரிடம் மனு
பின்னர் தொழிலாளர்துறை அமைச்சர் ராஜவேலு வை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.மனுவை பெற்றுகொண்ட அமைச்சர் அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.