Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, October 3, 2011

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

0 comments

புதுச்சேரி அக்-3
அரியாங்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.அரியாங்குப்பம் மருத்துவமனையை மேம்படுத்தி 24 மணிநேரமும் மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும்.வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் .மனைப்பட்டா இல்லா மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும், அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.அரியாங்குப்பம் ஆர்.கே.நகரில் நடந்த இப்பொதுக்கூட்டத்திற்கு கே.ஜெகதீசன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,தமிழ் மாநிலகுழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கமிட்டி உறுப்பினர்கள் பிரபுராஜ்,மதிவானன்,சிவசோலை,கலியமூர்த்தி உள்ளிட்ட திரளானேர் பங்கேற்றனர்.



புதுச்சேரி அக்-3
சர்வதேச நடவடிக்கை தினத்தை யொட்டி சிஜடியு,ஏஜடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் .கூட்டு பேரம் கூட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.தொழிற்சங்க,ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.நாளொன்றுக்கு 7மணிநேரமும்,வாரத்திற்கு 5நாட்கள் மட்டுமே வேலை என்பதை உத்தரவாத படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி அக்டோபர் 3ல் சர்வதேச நடவடிக்கை தினத்தில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் நடந்த இப்போராட்டத்திற்கு ஏஜடியுசி மாநில செயலாளர் வி.அபிஷேகம் தலைமை தாங்கினார்.சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஜஎன்டியுசி தலைவர் ஆர்.பலராமன்,ஏஜசிசிடியு துனைதலைவர் சங்கரன்,பிஎம்எஸ் தலைவர் பி.ராமச்சந்திரன்,யுடியுசி செயலாளர் வி.சந்திரசேகரன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
படம் உள்ளது

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com