போக்குவரத்து வரத்து நெரிசலை முறைபடுத்த வேண்டும் என கட்சியின் புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் நடைபெற்றது.மாநாட்டை துவக்கிவைத்து கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் போசினார்.மாநாட்டு அறிக்கையை கமிட்டி உறுப்பினர் எம்.பி.மதிவாணன் வாசித்தார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கே.முருகன்,எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.மாநாட்டை நிறைவு செய்து சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசினார்.

இம்மாநாட்டில் புதிய நகரகமிட்டி செயலாளராக என்.பிரபுராஜ் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் நகரகமிட்டி உறுப்பினர்களாக சுமதி,மதிவாணன்,மணவாளன்,மது,துரைமுருகன்,சரவணன்,சிவக்குமார்,அழகர்ராஜ் உள்ளிட்ட 9பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை காலம் கடத்தாமல் உடனே நடத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும்.நகர பகுதியில் ஏழைமக்களுக்கு அடுக்கு மாடிகுடியிருப்புகளை கட்டி கொடுக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.