

புதுச்சேரி அக்-16
மின்சார கட்டண உயர்வை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை மாநாடு வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது உழவர்கரை நகரகமிட்டி மாநாடு பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் நடைபெற்றது.கோடிஏற்றத்ததுடன் துவங்கிய மாநாட்டில் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பங்கேற்று துவக்கவுரையாற்றினார்.கமிட்டி செயலாளர் எஸ்.லெனின்துரை வேலைஅறிக்கையை சமர்பித்தார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன் ராஜாங்கம் ,கே.முருகன்,ராமசாமி மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.வாழ்த்தி பேசினார்கள்.இருதியாக மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் பிரதேசசெயலாளர் வெ.பெருமாள் பேசினார்.
இம்மாநாட்டில் புதிய உழவர்கரை நகரகமிட்டி செயலாளராக மீண்டும் எஸ்.லெனின்துரையும்,கமிட்டி உறுப்பினர்களாக நடராஜன்,ராமச்சந்திரன்,சத்தியா, ,சந்துரு,சேகர்,குப்புசாமி,குணசேகரன், பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மின்துறை கடந்த ஏப்ரல் 2010ம் ஆண்டிலிருந்து ,மின்நுகர்வோர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இதுநாள் வரைக்கான மின்சாரம், யூனிட் ஒன்றுக்கு 34.25காசு என கணக்கிட்டு தவனைமுறையில் கூடுதலாக வசூல் செய்வதை புதுச்சேர அரசு உடனடியாக கைவிட வேண்டும்.லாஸ்பேட்டை அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாமிப்பிள்ளை தோட்டத்தில் உள்ள வெள்ளவாரியை துhர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.