புதுச்சேரி அக்-24
மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி மின்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் கடந்த 7 மாதத்தில் பயண்படுத்திய மின்சாரத்திற்கு கூடுதலாக ஒரு யூனிட் ஒன்றுக்கு 34.25காசு உயர்த்தி மின்நுகவோர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மின்துறை உத்தரவை உடணடியாக திரும்ப வேண்டும்.மின்துறையில் ஏற்படும் இழப்பை கோடிகணக்கில் மின்பாக்கிவைத்துள்ள பெரிய நிறுவணங்களிடம் இருந்து வசூலித்து ஈடு செய்ய வேண்டும். மின்சார பற்றாக்குறையை போக்க மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெறவேண்டும்.மின்துறையில் மின்இழப்பை சரிசெய்ய புதிய டிரான்பார்ம்களை அமைத்து தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள துணைமின்துறை அலுவலம் எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலமை தாங்கினார்.தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கண்டன உரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நிலவழகன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் மது,மதிவாணன்,மணவாளன்,சரவணன்,உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
பாகூர்பாகூர் மேற்கு வீதியில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கொம்யூன்செயலாளர் எஸ்.பத்மநாபன் தலமை தாங்கினார்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,விவசாய சங்க தலைவர் ஜி.ராமசாமி ,கட்டுமான சங்க பொதுச்செயலாளர் கலியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் முத்துலிங்கம்,சாம்பசிவம்,சரவணன்,செல்வராஜ்,வடிவேலு உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உழவர்கரை
சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கட்சியின் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன்,சத்தியா,சந்துரு,பா°கர்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக மின்துறையை கண்டித்து அகல்விலக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.