
புதுச்சேரி அக்-14
மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சரை பதவியிலிருந்து நீக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டட்ம நடைபெற்றது.
10ஆம் வகுப்பு தேர்வில் மோசடியில் ஈடுபட்ட புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கண்டித்தும்.மாணவர் மற்றும் ஆசிரியர் சமூகத்திற்கும் ,மாநிலத்தின் மக்களுக்கும் பெரும் இழிவை ஏற்படுத்திய கல்வித்துறை அமைச்சரை உடனடியாக முதல்வர் ரங்கசாமி அப்பதவிலிருந்து நிக்க வேண்டும்.கடந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் மீது சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,முருகையன்,லெனின்துரை,மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.