
புதுச்சேரி அக்-22
மாஹே அரசு மருத்துவனையை நவீன படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளுர் இடைகமிட்டி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளுர் இடைகமிட்டி மாநாடு பள்ளுhரில் நடைபெற்றது.இம்மாநாட்டை கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கி வைத்து பேசினார்.கமிட்டி செயலாளர் ஜனார்த்தனன் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார்.மாநாட்டை கேராள மாநிலக்குழு உறுப்பினர் கே.கே.ராகேஷ் முடித்து வைத்து பேசினார்.
மாநாட்டில் புதிய இடைகமிட்டி செயலாளராக ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் பள்ளுர் இடைகமிட்டி உறுப்பினர்களாக சுரேந்திரன்,நாராயணன்,கங்காதரன்,பாபு,அஜிந்தன்,தாமோதரன்,பிரவீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாஹே அரசு கல்லுhரியில் புதிய படப்பிரிவுகளை துவக்க வேண்டும்.கேரளாவில் உள்ளதைப்போல் நலவாரியங்களை துவக்க வேண்டும்.கேரளாவில் வழங்கபடுகின்றதைபோல் புதுச்சேரி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பண்டங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.