புதுச்சேரி,செப்-23
விளை நிலங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசை விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 11வது மாநாடு, பாகூரில் உள்ள தோழர்.என்.வி நினைவரங்கத்தில் (தர்மராஜா திருமண நிலையத்தில்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இம்மாநாட்டின் கொடியை சங்கத்தின் பிரதேசக்குழு உறுப்பினர் கோ.இராமசாமி ஏற்றிவைத்தார்.கொம்யூன் குழு செயலாளர் த.முத்துலிங்கம் பிரதிநிதிகளை வரவேற்றார். சங்கத்தின் பிரதேச தலைவர் வே.கு.நிலவழகன் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொருளாளர் ஏ.நாகப்பன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,கொம்யூன் குழு செயலாளர் தமிழ்ச்செல்வன்,வி.தொ.ச வின் பிரதேச செயலாளர் மணிபாலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.சங்கத்தின் பிரதேச செயலாளர் பத்மநாபன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சரவணன் வாசித்தார்.அதனை தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் நாகைமாவட்ட செயலாளர் வி.சுப்புரமணியன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக மீண்டும் வே.கு. நிலவழகன்,செயலாளராக வி. சங்கர்,பொருளாளராக எஸ்.எம்.தமீம் உள்ளிட்ட 15பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மாணங்கள்
காரைக்காலுக்குரிய காவிரி நீரைப்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக இந்த ஆண்டு அறிவித்து ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு தலா 10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும்.எல்.ஆர்.கூட்டுறவு சர்கக்கரை ஆலை வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ.45கோடியை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். பால்கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.25 வழங்க வேண்டும்.மாட்டு தீவனம் மாண்ய விலையிலும்,உரம் பூச்சி கொள்ளி மருந்துகளை உரிய காலத்தில் தட்டுபாடின்றி கிடைக்கவும்,மானியத்துடனும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதுதில்லி, செப். 14-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண் டர் வெட்டு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறு வனங்களுக்கு அனுமதி, பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்பனை உள்ளிட்ட ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக செப்டம்பர் 20ம்தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு எட்டு கட்சிகள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன. அன்றைய தினம் கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம், சிறை நிரப்பும் போராட்டம் என போராட்டங்களில் ஈடுபடுமாறு அனைத்துப் பகுதி மக்களையும் இந்தக் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக கொடூரமான தாக்குதல் தொடுத்து வருகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள் ளது. இதனால் விலைவாசி உயர்வதோடு, விவசாயி களின் சுமையும் கடுமையாக அதிகரிக்கும். குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்கப் படும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள் ளது. இதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலையில் இரண்டு மடங்கைவிட கூடுத லாக விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய சூப் பர் மார்க்கெட் சங்கிலி நிறுவனங்களை அனுமதிப்பது என்றும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடிக்கும் அதிகமானோரும் பெரும் பகுதி நுகர்வோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.நால்கோ, ஆயில் இந்தியா போன்ற லாபமீட்டும் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களை தனியாருக்கு விற்பதென்றும் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக போர்க்குரல் முழங்குமாறு அனைத்துப் பகுதிமக்களுக்கும் நாங்கள் அறை கூவல் விடுக்கிறோம்.விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்துப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ளோர், சிறு கடைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த மகத்தான போராட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தேசபக்த உணர்வுள்ள அனைத்து குடிமக்க ளும் போராட்டத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.மக்களுக்கு மேன்மேலும் சுமையை ஏற்றக் கூடிய, அவர்களது வாழ்வாதாரத்தை தகர்க்கக் கூடிய மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றுபடுவது அவசியமாகும். கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் சிறைநிரப்பும் போராட்டம் என செப்டம்பர் 20ம்தேதி சக்திமிக்க போராட்டத்தை நடத்துமாறு அறை கூவல் விடுக்கிறோம்.இவ்வாறு கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சமாஜ்வாதி கட்சித் தலைவ முலாயம் சிங் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி.தேவகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, பிஜு ஜனதாதளத் தலைவர் நவீன்பட்நாயக், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பி.ஜே.சந்திரசூடன்ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.