புதுச்சேரி,செப்-11
சுஸ்லான் ஆலையை திறக்க கோரி சிஐடியு சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி திருவாண்டார் கோவிலில் சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ள சுஸ்லான் காற்றாலை தயாரிக்கும் தொழிற்சலையை உடனே திறக்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட கடந்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையை தொழிலாளர் துறை ஆணையர் முன்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பணீ நீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
காந்தி நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுஸ்லான் தொழிலாளர் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி,செயலாளர் கே.முருகன்,இணை செயலாளர் சிவக்குமார்,துணைதலைவர் குணசேகரன்,மற்றும் நிர்வாகிகள் பாபு,சக்திவேல்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி,செப்-11
உணவு பாதுகாப்பை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண இயக்கம் நடைபெற்றது.
அணைவருக்கும் மாதம் 35கிலோ உணவு தாணியங்கள் வழங்க உரிய திருத்ததோடு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.பொது வினியோக முறையை பலபடுத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.பாகூர் நெற்களஞ்சியத்தை பாதுகாக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்துள்ள கொலை,கொள்ளைகளை கட்டுபடுத்த வேண்டும்.100 நாள் வேலை உறுதி திட்டத்தை துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயண இயக்கம் நடைபெற்றது.
பாகூரில் துவங்கிய நடைபயண இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன் நடைபயண இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.காட்டுகுப்பம்,கண்ணிகோவில்,பரிக்கல் பட்டு குருவிநத்தம்,சோரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து கரையாம்பத்துரில் நிரைவடைந்த நடைபயணத்தில் , சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கலந்து கொண்டு பேசினார்.கட்சியின் பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி,கலியன்,செல்வராஜ்,அரிதாஸ் மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் நடைபயண இயக்கத்தில் பங்கேற்றனர்.